For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

CM Punk returns : 5 ஆண்டுகளாக அடங்காத சத்தம்.. சைலன்ட்டாக WWEக்கு திரும்பிய தல.. ரசிகர்கள் செம ஷாக்!

நியூயார்க் : பிரபல ரெஸ்லிங் வீரர் சிஎம் பங்க் சுமார் ஐந்து ஆண்டு காலம் கழித்து மீண்டும் WWEக்கு திரும்பி அதிர்ச்சி அளித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு WWE-ஐ விட்டு சண்டை போட்டு வெளியேறினார் சிஎம் பங்க். WWE வரலாற்றில் இவர் அளவுக்கு புரட்சி செய்த வீரர்கள் ஒன்று, இரண்டு பேர் தான் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட சிம் பங்க் மீண்டும் எப்போது WWEக்கு திரும்புவார் என ஏக்கத்துடன் காத்திருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பங்க். ஆனால், அவரது வருகையில் ஒரு சின்ன குழப்பமும் உள்ளது.

மெய் மறக்க வைக்கும் வீரர்

மெய் மறக்க வைக்கும் வீரர்

சிம் பங்க் WWE நிகழ்ச்சியில் மக்களை அதிகம் மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். அதற்கேற்ப தான் பங்கேற்கும் போட்டிகளை பார்வையாளர்கள் மெய் மறந்து பார்க்கும் வகையில் மாற்றுவார்.

பேச்சுத் திறன்

பேச்சுத் திறன்

அவரது பேச்சுத் திறனும் மற்ற ரெஸ்லிங் வீரர்களை காட்டிலும் அதிகமாக பாரட்டு பெற்றது. சில காலம் வர்ணனையாளராக கூட செயல்பட்டுள்ளார் பங்க். WWE நிகழ்ச்சிகளில் ரெஸ்லிங் சண்டைகளில் பங்கேற்ற பின் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றார்.

சர்ச்சை நாயகன்

சர்ச்சை நாயகன்

இடையே தனக்கு உரிய அங்கீகாரத்தை WWE உரிமையாளர்கள் தனக்கு அளிக்கவில்லை என எண்ணிய அவர், ஒரு முறை ஒப்பந்த காலம் முடியும் போது WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை எடுத்துக் கொண்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

ரசிகர் படை

ரசிகர் படை

அது WWEக்கு பெருத்த அவமானமாக மாறியது. பின்னர், தனக்கு உரிய அங்கீகாரங்களை பெற்ற பின் பெரிய நட்சத்திரமாக மீண்டும் WWEக்கு திரும்பினார். அவரது கலகச் செயல் அவருக்கு மிகப் பெரும் ரசிகர் படையை பெற்றுத் தந்தது.

ஒதுங்கினார்

ஒதுங்கினார்

அதன் பின் சில ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக வலம் வந்த பங்க் மீண்டும் நிகழ்ச்சிகளில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என கருதி இருக்கிறார். அதனால், WWE-ஐ விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார்.

திருமண நாள்

திருமண நாள்

தங்களை சிஎம் பங்க் மதிக்கவில்லை எனக் கருதிய WWE நிறுவனம், சரியாக அவரது திருமண நாள் அன்று அவரை WWE-ஐ விட்டு நீக்குவதாக குறுந்தகவல் அனுப்பி பழி வாங்கியது. இந்த சம்பவங்கள் 2014ஆம் ஆண்டு நடைபெற்றது.

ரசிகர்கள் கோஷம்

ரசிகர்கள் கோஷம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்க் WWE நிகழ்ச்சிகளில் பங்கேற்காவிட்டாலும், பல முறை WWE-இன் ரா மற்றும் ஸ்மேக்டவுன் நிகழ்ச்சிகள் ரசிகர்களை ஈர்க்காத அளவுக்கு மோசமாக அமையும் போது, ரசிகர்கள் "சிஎம் பங்க்" பெயரை கூறி கோஷம் எழுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இன்று வரை இந்த கோஷம் அடங்கவில்லை. வேறு எந்த வீரருக்கும் இப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருக்குமா? என்பது சந்தேகமே.

மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ்

மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ்

சிஎம் பங்க் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்பு கலை சார்ந்த சண்டைப் போட்டியில் பங்கேற்றார்.அதில் படுதோல்வி அடைந்த அவர், பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தார்.

விவாத நிகழ்ச்சியில் பங்க்

விவாத நிகழ்ச்சியில் பங்க்

இந்த நிலையில், WWE புதிதாக துவக்கி இருக்கும் ஒரு விவாத நிகழ்ச்சியில் சிஎம் பங்க் பங்கேற்க உள்ளார். WWE பேக்ஸ்டேஜ் என்ற அந்த விவாத நிகழ்ச்சியில் அடுத்த வாரம் முதல் பங்க் பங்கேற்க உள்ளார். அந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தில் பங்க் தோன்றி அதை உறுதி செய்துள்ளார். அந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பெரிய அதிர்வை உண்டாக்கி உள்ளது.

தல சண்ட செய்யணும்

"சிஎம் பங்க் சண்ட செய்யணும்" என காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவர் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார் எனும் செய்தி ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஆனால், சிலர் பங்க் விரைவில் சண்டைகளில் பங்கேற்பார் என்கிறார்கள். அதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Story first published: Thursday, November 14, 2019, 12:20 [IST]
Other articles published on Nov 14, 2019
English summary
CM Punk returns to WWE after 5 years. He left the company in 2014, after he had difference with the owners.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+