Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9 வயதில் இப்படி ஒரு திறமையா.. சிலம்பம் சுற்றுவதில் உலக சாதனை படைத்த கோவை சிறுவன்.. என்ன ஸ்பெஷல்??

கோவை: சுலம்பம் சுற்றுவதில் உலக சாதனை படைத்த கோவையை சேர்ந்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 Coimbatore 9 year old Vimalesh sets a new record in Silambam and Surul vaal

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள காபி கடை பகுதியை சேர்ந்தவர் விமலேஷ்.

9 வயதே ஆகும் இவர், சுருள்வால் மற்றும் சிலம்பம் சுற்றும் கலையை கோவை முல்லை தற்காப்பு பள்ளியில் முயன்றாக பயின்று வந்துள்ளார்.

தனது கலை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட விமலேஷ், நீண்ட நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்க விரும்பினார். அதன்படி ஒரு கையில் சிலம்பம் மற்றொரு கையில் சுருள் வாளை தொடர்ச்சியாக 9 மணி நேரம் சுற்றி அசத்தினார். 5ம் வகுப்பே பயிலும் விமலேஷுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசியர்கள் ஊக்கமளித்தனர்.

இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்த்த நிர்வாகிகள் வினோத், பரத்குமார் ஆகியோர் பதக்கம், கேடயம் மற்றும் கோப்பை ஆகியவற்றை மாணவன் விமலேஷுக்கு வழங்கி கவுரவித்தனர். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகிறது.

Story first published: Wednesday, July 27, 2022, 20:04 [IST]
Other articles published on Jul 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+