Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

84 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றிலேயே “பெருசு” இவர்தான்!

குயுபா: 84 ஆண்டுகால உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக வயதில் போட்டிகளில் பங்கேற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் 43 வயது கொலம்பிய கோல் கீப்பர் பாரிட் மோன்ட்டிராகன்.

இதற்கு முன்னர் கடந்த 1994-ம் ஆண்டு உலக கோப்பையில் கேமரூன் வீரர் ரோஜர் மில்லா தனது 42 வயது 39 நாட்களில் கலந்து கொண்டதே இதுவரை சாதனையாகக் கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் 85-வது நிமிடத்தில் கொலம்பிய கோல் கீப்பர் டேவிட் ஓஸ்பினாவுக்கு பதிலாக மாற்று கோல் கீப்பராக களமிறங்கினார் பாரிட் மோன்ட்டிராகன். இதன் மூலம் மிக அதிக வயதில் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் கலந்து கொண்டவர் என்ற சாதனையை தனதாக்கினார் மோன்ட்டிராகன்.

மேலும், பல சிறப்புகள்...

மேலும், பல சிறப்புகள்...

43 ஆண்டுகள் 3 நாட்கள் வயதாகும் மோன்ட்டிராகனுக்கு இந்த ஒரு சாதனை மட்டுமில்லாது மேலும் சில சிறப்புகளும் இந்த உலகக் கோப்பை போட்டி மூலம் கிடைத்துள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பின்...

16 ஆண்டுகளுக்குப் பின்...

அதாவது, 1994-ம் ஆண்டு மற்றும் 1998-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளில் விளையாடிய மோன்ட்டிராகன், 16 ஆண்டுகள் கழித்து இந்த உலக கோப்பையில் பங்கு பெற்றுள்ளார்.

நீண்ட இடைவெளி...

நீண்ட இடைவெளி...

இதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக கோப்பையில் ஆடியவர் பெருமையும் மோன்ட்டிராகனுக்கு கிடைத்துள்ளது.

நீண்ட கால வீரர்...

நீண்ட கால வீரர்...

அத்துடன், 1994ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரு வீரராக நீண்ட காலம் உலக கோப்பையில் ஆடியவர் என்ற சாதனையையும் மோன்ட்டிராகன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 26, 2014, 15:24 [IST]
Other articles published on Jun 26, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+