Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று இந்தியா 8 தங்கம் வெல்ல வாய்ப்பு.. 0.01 விநாடி.. ! விதியால் ஹிமா தாஸுக்கு கொடுமை.

பிர்மிங்காம்: 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 8 நாட்கள் முடிவில் 9 தங்கம், 8 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

9வது நாளான இன்று மட்டும் இந்தியாவுக்கு 8 தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதே போன்று கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்தை மதியம் 3.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

வினேஸ் போகட்

வினேஸ் போகட்

நேற்று மட்டும் ஒரு மணி நேரத்தில் மல்யுத்தம் பிரிவில் இந்திய அணி 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது. அதே போல் மல்யுத்த விளையாட்டில் இன்று மட்டும் இந்தியாவுக்கு 6 தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மகளிருக்கான மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், வினேஸ் போகட், பூஜா கேலட், பூஜா சிஹாக் ஆகியோரும் இன்று இரவு 9.30 மணி அளவில் தங்கப் பதக்கத்திற்காக மோதுகின்றனர்.

ரவிகுமார் தாஹியா

ரவிகுமார் தாஹியா

இதே போன்று மல்யுத்தம் ஆடவர் பிரிவில் தீபக் நெஹ்ரா, ரவிகுமார் தாஹியா,நவின் சிஹாக் ஆகியோர் இன்று இரவு தங்கப் பதக்கத்திற்கு மோத உள்ளனர். சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் மஞ்சு பாலா களம் காண்கிறார்.

பிவி சிந்து

பிவி சிந்து

இதே போன்று பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பாவினா பட்டேல் தங்கப் பதக்கத்திற்காக இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு மோதுகிறார். இதை தவிர பிவி சிந்துவின் காலிறுதி ஆட்டம் 4.20 மணிக்கு மாலையில் நடைபெறுகிறது. இதனிடையே, 200 மீட்டர் அரையிறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

ஹிமா தாஸுக்கு கொடுமை

ஹிமா தாஸுக்கு கொடுமை

இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இதில் ஹிமா தாஸ் பந்தய தூரத்தை 23.42 விநாடிகளில் கடந்து 3வது இடத்தை பிடித்தார். முதல் இடத்தில் நமிபியா வீராங்கனை கிறிஸ்டைன் 22 புள்ளி 93 விநாடியிலும், ஆஸ்திரேலியாவின் என்னோலி 23.41 விநாடியில் கடந்தார்.ஹிமா தாஸ் மற்றும் என்னோலி இருவரும் ஒரே நேரத்தில் கடந்தது போல் இருந்ததால், அது மறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஹிமா தாஸ் தலை எல்லை கோட்டை கடந்தாலும், உடல் சற்று பின்னால் இருந்தது. இதனை வைத்து ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 2வது இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டார்.

Story first published: Tuesday, August 9, 2022, 19:01 [IST]
Other articles published on Aug 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+