Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலாகலமாக இன்று தொடங்குகிறது 20வது காமன்வெல்த் போட்டி: சாதிக்குமா இந்தியா?

கிளாஸ்கோ: 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று இரவு விமரிசையாக தொடங்க உள்ளது.

இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த நாடுகள் மற்றும் அதன் ஆதிக்க நாடுகள் ஒன்றிணைந்து நடத்தும் போட்டித்தொடர் காமன்வெல்த் விளையாட்டு. தமிழில் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் என்றும் கூறலாம்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகளுக்கு அடுத்து அதிக நாடுகள் பங்கேற்கும் மிகப்பெரிய விளையாட்டு தொடராக இது கருதப்படுகிறது. இந்த போட்டித்தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். 1930ம் ஆண்டு முதல் இதுபோன்ற போட்டித்தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு முன்பாக, 2010ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தன.

4500 வீரர்கள் பங்கேற்பு

4500 வீரர்கள் பங்கேற்பு

இந்நிலையில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர், ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கா நகரில் இன்று தொடங்கி ஆகஸ்டு 3ம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 17 வகையான விளையாட்டுகளுக்கு 261 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

இந்திய தரப்பில் 215 பேர் குழு

இந்திய தரப்பில் 215 பேர் குழு

இந்திய தரப்பில் 215 பேர் கொண்ட விளையாட்டு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தடகளம், ஹாக்கி, நீச்சல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, லான் பவ்ல்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 14 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

டெல்லி சாதனை தொடருமா?

டெல்லி சாதனை தொடருமா?

டெல்லி காமன்வெல்த்தில் இந்தியா 39 தங்கம் உள்பட 101 பதக்கங்களை அள்ளி குவித்து புதிய சாதனையை படைத்தது. ஒரு காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா சேகரித்த அதிக பதக்கங்கள் இதுதான். ஆனால் அதே போன்று இந்த தடவையும் பதக்கங்களை வெல்வது கடினம். இதற்கு சில காரணங்கள் உள்ளன.

இந்தியாவுக்கு பாதகம்

இந்தியாவுக்கு பாதகம்

இம்முறை, காமன்வெல்த் போட்டித்தொடரில் இந்தியாவுக்கு சாதகமான சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வில்வித்தை மற்றும் டென்னிஸ் போட்டி இந்த முறை கிடையாது. இவற்றின் மூலம் இந்தியா கடந்த காமன்வெல்த்தில் 12 பதக்கங்களை வென்றிருந்தது. மல்யுத்தம் விளையாட்டில் இந்தியர்கள் சோபிக்கும், ‘கிரேக்கோ-ரோமன்' என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

சாய்னா விலகல்

சாய்னா விலகல்

2010ம் ஆண்டு காமன்வெல்த்தில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 30 பதக்கங்களை கைப்பற்றியது. இந்த முறை துப்பாக்கி சுடுதலில் 44 பிரிவுகள் 19 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. பேட்மிண்டன் நட்சத்திரம், சாய்னா நேஹ்வால் காயத்தால் விலகியுள்ளதும் இந்தியாவுக்கு பின்னடைவு. இம்முறை முதல் இடம், ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்துக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நட்சத்திரங்கள்

இந்திய நட்சத்திரங்கள்

இந்திய தரப்பில் மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், யோகேஷ்வர்தத், துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற அபினவ் பிந்த்ரா, விஜய்குமார், ககன்நாரங் மற்றும் மனவ்ஜித் சிங் சந்து, ராஹி சர்னோபாத், ஹீனா சித்து, ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல், டேபிள் டென்னிசில் சரத் கமல், சவும்யாஜித் கோஷ், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, காஷ்யப், குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், ஷிவ தாபா, மனோஜ்குமார், சரிதாதேவி, தினேஷ் குமார், பளுதூக்குதலில் நடப்பு சாம்பியன் ரவிகுமார், சஞ்சிதா சானு உள்ளிட்டோர் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.

உலக நட்சத்திரங்கள்

உலக நட்சத்திரங்கள்

உலக நட்சத்திரங்கள் என்று பார்த்தால், உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் ஜமைக்காவின் உசேன் போல்ட், இங்கிலாந்தின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் மோ பாரா ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி இரவு 8 மணி) கோலகலமான தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் 288 நாட்களில் 1 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த காமன்வெல்த் ஜோதி (குயின் பேட்டன்), இறுதி கட்ட தொடர் ஓட்டமாக, தொடக்க விழா நடைபெறும் செல்டிக் பார்க் மைதானத்திற்குள் கொண்டு வரப்படும்.

தேசிய கொடியேந்தும் விஜய்குமார்

தேசிய கொடியேந்தும் விஜய்குமார்

இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிசபெத், வாழ்த்துரை செய்தியை வாசித்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார். 71 நாடுகளின் அணிவகுப்பும் தொடக்க விழாவில் இடம் பெறும். இதில் இந்திய அணிக்கு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் தேசிய கொடியை ஏந்த இருக்கிறார். தொடக்க நாள் அன்று போட்டி ஏதும் கிடையாது. 24ம்தேதி இருந்து போட்டிகள் தொடங்கும்.

டெண்டுல்கர் பங்கேற்பு

டெண்டுல்கர் பங்கேற்பு

காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழா நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கிறார். தொடக்க விழா 3 மணி நேரம் நடைபெறும். 2 ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். டென் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சன் செய்தி சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Story first published: Wednesday, July 23, 2014, 18:07 [IST]
Other articles published on Jul 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+