Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்... 6 தங்கப்பதக்கங்களுடன் 5வது இடத்தில் இந்தியா!

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம், 9 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது இந்தியா.

நடைபெற்று வரும் 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நான்காவது நாளில், 77 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான ரவி கட்டுலு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Commonwealth Games 2014: Three medals for India on Day 4

9வது பதக்கம்...

இதன் மூலம் பளு தூக்கும் போட்டியில் மட்டும் இந்திய அணி ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது.

6 தங்கப்பதக்கங்கள்...

இப்பதக்கங்களையும் சேர்த்து இந்திய அணி இதுவரை 6 தங்கப் பதக்கங்களையும், 9 வெள்ளிப் பதக்கங்களையும், 7 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

மொத்தம் 20 பதக்கங்கள்...

இதன்மூலம் மொத்தம் 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.

முதலிடம்...

26 தங்கம், 21 வெள்ளி 26 வெண்கலம் என 73 பதங்கங்களுடன் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 28, 2014, 16:36 [IST]
Other articles published on Jul 28, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+