For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 தங்கம் உள்ளிட்ட 61 பதக்கம் வென்ற இந்தியா.. பட்டியலில் 4வது இடத்தில் நிறைவு

By Staff

பிர்மிங்கம்: காமன்வெல்த் 2022 போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வெற்றி நடை போட்டனர்.

நடப்பாண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று ஆகஸ்ட் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி இதுவரை 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தமாக 61பதக்கங்களை குவித்து பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளனர்.

Commonwealth Games 2022 LIVE News Updates, Match Results and Highlights in Tamil

Aug 09, 2022, 7:35 pm IST

22 தங்கம் உள்ளிட்ட 61 பதக்கம் வென்ற இந்தியா.. பட்டியலில் 4வது இடத்தில் நிறைவு

Aug 08, 2022, 6:41 pm IST

2022 காமன்வெல்த்தில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் வென்று 61 பதக்கங்களுடன் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா நிறைவு

Aug 08, 2022, 6:38 pm IST

ஹாக்கி ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 7க்கு0 என்ற கோல் கணக்கில் தோற்ற இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது

Aug 08, 2022, 6:36 pm IST

பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக், சிராக் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது

Aug 08, 2022, 6:36 pm IST

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் தங்கம் வென்றார்

Aug 08, 2022, 5:51 pm IST

ஹாக்கி ஆடவருக்கான இறுதிப் போட்டி - முதல் பாதியில் ஆஸ்திரேலியா 5 கோல்கள் அடித்துள்ளது. இந்தியா ஜீரோ

Aug 08, 2022, 5:11 pm IST

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்

Aug 08, 2022, 4:39 pm IST

மலேசிய வீரர் யாங்கை 19க்கு21, 21க்கு9, 21க்கு16 என்ற கணக்கில் வீழ்த்தி 20 வயதான லக்சயா சென் தங்கம் வென்றார்

Aug 08, 2022, 4:39 pm IST

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் தங்கம் வென்றார்

Aug 08, 2022, 4:17 pm IST

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென், மலேசிய வீரர் யாங் ஆகியோர் மோதும் இறுதிப் போட்டியில் இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியுள்ளனர்.

Aug 08, 2022, 4:17 pm IST

19 தங்கம் வென்ற இந்தியா நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற்றம்

Aug 08, 2022, 4:17 pm IST

காமன்வெல்த் வரலாற்றில் இது இந்தியா வெல்லும் 200வது தங்கமாகும்

Aug 08, 2022, 4:16 pm IST

காமன்வெல்த் வரலாற்றில் பிவி சிந்து வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்

Aug 08, 2022, 2:50 pm IST

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து தங்கம் வென்றார்

Aug 08, 2022, 2:50 pm IST

பேட்மிண்டன் இறுதிப் போட்டி - கனடா வீராங்கனை மிட்சில் லீக்கு எதிரான முதல் செட்டில் பிவி சிந்து 21க்கு15 என்ற கணக்கில் முன்னிலை

Aug 08, 2022, 1:56 pm IST

மாலை 5 மணிக்கு ஆடவருக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதல்

Aug 08, 2022, 1:56 pm IST

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல், பிரிட்டன் வீரர் லியம் பிட்ச்ஃபோர்ட் உடன் தங்கப் பதக்கத்திற்காக மோதல்

Aug 08, 2022, 1:54 pm IST

பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சத்விக்-சிராக் ஜோடி இறுதிப் போட்டியில் மாலை 3 மணிக்கு மோதுகிறது

Aug 08, 2022, 1:52 pm IST

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென், மலேசிய வீரர் யாங் சியை தங்கப் பதக்கத்திற்காக எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி மதியம் 2.10 மணிக்கு தொடங்கும்

Aug 08, 2022, 1:52 pm IST

காமன்வெல்த் வரலாற்றில் பிவி சிந்து வென்ற பதக்கம் - 2014ஆம் ஆண்டு வெண்கலம், 2018ஆம் ஆண்டு வெள்ளி. முதல் முறையாக தற்போது தங்கம் வெல்ல வாய்ப்பு

Aug 08, 2022, 1:52 pm IST

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு -தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் பிவி சிந்து, கனடா வீராங்கனை மிட்சில் லீயை இன்னும் சற்று நேரத்தில் எதிர்கொள்கிறார்

Aug 07, 2022, 4:45 pm IST

ஆண்கள் நடைப்பந்தய போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்

Aug 07, 2022, 3:06 pm IST

மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனை ஜியா மின் யோவை வீழ்த்தினார்

Aug 07, 2022, 1:30 pm IST

இந்திய மகளிர் ஹாக்கி அணி இன்று வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது

Aug 06, 2022, 11:16 pm IST

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது தாஹிரை வீழ்த்தினார் நவீன். இது இந்தியாவுக்கு 12வது தங்கமாகும்.

Aug 06, 2022, 11:12 pm IST

மல்யுத்தம் ஆடவருக்கான 74 கிலோ எடைப் பிரிவில் நவீன் தங்கம் வென்றார்

Aug 06, 2022, 11:01 pm IST

மல்யுத்தம் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் தங்கம் வென்றார்

Aug 06, 2022, 11:00 pm IST

மல்யுத்தம் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் ரவிகுமார் தஹியா தங்கம் வென்றார்

Aug 06, 2022, 10:00 pm IST

மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கேலாட் வெண்கலம் வென்றார்

Aug 06, 2022, 9:13 pm IST

லான் பவுல்ஸ் ஆடவர் பிரிவில் 4 பேர் கொண்ட இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது

Aug 06, 2022, 9:13 pm IST

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத், ஸ்ரீஜா ஜோடி இறுதிச் சுற்றுக்கு சென்று பதக்கத்தை உறுதி செய்தது

Aug 06, 2022, 9:12 pm IST

மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை %ஸ்மீனுக்கு வெண்கலம் கிடைத்தது

Aug 06, 2022, 6:59 pm IST

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்

Aug 06, 2022, 6:59 pm IST

அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Aug 06, 2022, 6:59 pm IST

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 164/5 ரன்களை குவிக்க, இதன்பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 160/6 ரன்களை மட்டுமே எடுத்தது

Aug 06, 2022, 6:16 pm IST

மகளிர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேற்றினார்

Aug 06, 2022, 6:16 pm IST

காலிறுதிப்போட்டியில் மலேசிய வீராங்கனை காஜ் ஜின் வெய்-ஐ 19 - 21, 21 - 14, 21 - 18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அபாரம்

Aug 06, 2022, 6:09 pm IST

ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ரவி தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

Aug 06, 2022, 6:09 pm IST

அரையிறுதியில் பாகிஸ்தான் வீரர் அலி அசாத்-ஐ வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்

Aug 06, 2022, 5:45 pm IST

பேட்மிண்டன் காலிறுதிப்போட்டியில் முதல் சுற்றில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது சுற்றில் அபார வெற்றி

Aug 06, 2022, 5:14 pm IST

பேட்மிண்டன் காலிறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி; கம்பேக் கொடுக்க போராட்டம்

Aug 06, 2022, 4:37 pm IST

மகளிர் 76 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப்போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா சிஹாக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Aug 06, 2022, 3:35 pm IST

மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நீத்து கங்காஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்

Aug 06, 2022, 10:20 am IST

கிரிக்கெட்டில் அரையிறுதி சுற்றில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்தை மதியம் 3.30 மணிக்கு எதிர்கொள்கிறது

Aug 06, 2022, 10:07 am IST

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்துவின் காலிறுதி ஆட்டம் 4.20 மணிக்கு மாலையில் நடைபெறுகிறது

Aug 06, 2022, 10:06 am IST

பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பாவினா பட்டேல் தங்கப் பதக்கத்திற்காக இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு மோதுகிறார்

Aug 06, 2022, 10:06 am IST

மல்யுத்தம் ஆடவர் பிரிவில் தீபக் நெஹ்ரா, ரவிகுமார் தாஹியா,நவின் சிஹாக் ஆகியோர் இன்று இரவு 9.30 மணிக்கு பலப்பரீட்சை

Aug 06, 2022, 10:06 am IST

மகளிருக்கான மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், வினேஸ் போகட், பூஜா கேலட், பூஜா சிஹாக் ஆகியோரும் இன்று இரவு 9.30 மணி அளவில் தங்கப் பதக்கத்திற்காக மோதுவார்கள்

Aug 06, 2022, 10:06 am IST

மல்யுத்த விளையாட்டில் இன்று மட்டும் இந்தியாவுக்கு 6 தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு

Aug 05, 2022, 11:57 pm IST

மல்யுத்தம் மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா கக்ரான் வெண்கலம் வென்றார்

Aug 05, 2022, 11:56 pm IST

ஆடவருக்கான மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா தங்கம்

Aug 05, 2022, 11:14 pm IST

மகளிருக்கான மல்யுத்தம் 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஷாக்சி மாலிக் தங்கம்

Aug 05, 2022, 10:36 pm IST

டேபிள் டென்னிஸ் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு தமிழக ஜோடி சரத் கமல், சத்யன் ஞானசேகரன் தகுதி

Aug 05, 2022, 10:36 pm IST

காலிறுதியில் 11-6 11-8 11-4 என்ற கணக்கில் இங்கிலாந்து ஜோடியை வீழ்த்தியது

Aug 05, 2022, 10:27 pm IST

ஆடவருக்கான மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்

Aug 05, 2022, 10:16 pm IST

இறுதிப் போட்டியில் 2 முறை காமன்வெல்த் சாம்பியனான நைஜிரிய வீராங்கனை ஓடோனியாவிடம் 4க்கு7 என்ற கணக்கில் வீழ்ந்த அன்சு மாலிக்கிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

Aug 05, 2022, 10:16 pm IST

முன்பாக விளையாடிய தனது 2 போட்டியையும் அன்சு மாலிக் ஒரு நிமிடத்திற்குள் வென்றது குறிப்பிடத்தக்கது

Aug 05, 2022, 10:16 pm IST

மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றார்

Aug 05, 2022, 10:01 pm IST

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சத்யன், மணிக்கா பத்ரா ஜோடி காலிறுதியில் தோல்வி

Aug 05, 2022, 10:01 pm IST

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல், ஸ்ரீஜா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு தகுதி

Aug 05, 2022, 7:56 pm IST

மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் இறுதிப் போட்டிக்கு தகுதி

Aug 05, 2022, 7:54 pm IST

மகளிருக்கான 56 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஷாக்சி மாலிக் இறுதிப் போட்டிக்கு தகுதி

Aug 05, 2022, 7:49 pm IST

ஆடவருக்கான மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா இறுதிப் போட்டிக்கு தகுதி

Aug 05, 2022, 7:19 pm IST

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு பிவி சிந்து தகுதி. உகாண்டா வீராங்கனை ஹூசினா 21க்கு10,21க்கு9 என்ற கணக்கில் வீழ்த்தினார்

Aug 05, 2022, 7:15 pm IST

ஆடவருக்கான மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா அரையிறுதிக்கு தகுதி

Aug 05, 2022, 4:19 pm IST

டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழக ஜோடியான சத்யன் ஞானசேகரன், சரத் கமல் காலிறுதிக்கு தகுதி

Aug 05, 2022, 4:14 pm IST

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ரீத் டென்னிசன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி

Aug 05, 2022, 4:14 pm IST

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிக்கா பத்ரா காலிறுதிக்கு தகுதி.. இன்று இரவு காலிறுதி போட்டி நடைபெறுகிறது

Aug 05, 2022, 3:31 pm IST

ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

Aug 05, 2022, 3:31 pm IST

பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Aug 05, 2022, 3:31 pm IST

அரையிறுதிச்சுற்றில் இங்கிலாந்தின் சுயூ பெய்லியை 11 - 6, 11 - 6, 11 - 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முன்னேறினார்

Aug 04, 2022, 8:10 pm IST

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா, சவுரவ் ஜோடி காலிறுதிக்கு தகுதி

Aug 04, 2022, 7:05 pm IST

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, ஹரிந்தர் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி

Aug 04, 2022, 6:58 pm IST

மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ஜாஸ்மின் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்

Aug 04, 2022, 5:59 pm IST

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சனில் செட்டி, டென்னிசன் ஜோடி முதல் சுற்றில் மலேசியாவிடம் தோல்வி

Aug 04, 2022, 5:58 pm IST

பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் அஸ்வினி பொன்னப்பா,சுமித் ரெட்டி 2வது சுற்றில் தோல்வி

Aug 04, 2022, 5:58 pm IST

ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் அமித் பாங்கல் பதக்கத்தை உறுதி செய்தார். இது குத்துச்சண்டையில் மட்டும் கிடைக்கப்போகும் 4வது பதக்கமாகும்

Aug 04, 2022, 5:09 pm IST

மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஹிமா தாஸ் அரையிறுதிக்கு தகுதி

Aug 04, 2022, 3:45 pm IST

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி. மாலத்தீவு வீராங்கனை பாத்திமாவை 21-4, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்

Aug 04, 2022, 3:43 pm IST

பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தற்போது பிவி சிந்து முதல் சுற்றில் மோதல்

Aug 04, 2022, 12:19 pm IST

காமன்வெல்த் தொடரில் இன்று இந்தியாவுக்கான போட்டிகள் மதியம் 2 மணிக்கு தொடங்குகின்றன

Aug 04, 2022, 12:19 pm IST

முதல் போட்டியாக டேபிள் டென்னிஸ் கலப்பு பிரிவில் இந்திய அணி களமிறங்குகிறது

Aug 03, 2022, 11:00 pm IST

காமன்வெல்த் வரலாற்றில் முதல் முறையாக ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்றுள்ளது

Aug 03, 2022, 11:00 pm IST

காமன்வெல்த் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சௌரவ் கோஷல் வெண்கலம் வென்றார்

Aug 03, 2022, 8:19 pm IST

ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் கனடாவை 8க்கு0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Aug 03, 2022, 7:04 pm IST

ஆடவருக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் அரையிறுதிக்கு வென்று 2வது பதக்கத்தை உறுதி செய்தார்

Aug 03, 2022, 7:04 pm IST

மகளிருக்கான ஹாக்கி போட்டியில் கனடாவை 3க்கு2 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

Aug 03, 2022, 5:20 pm IST

காமன்வெல்த் ஜூடோ மகளிருக்கான 78 கலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை துலிகா இறுதிக்கு முன்னேற்றம். இன்று இரவு தங்கப் பதக்கத்திற்காக போட்டியிட உள்ளார்

Aug 03, 2022, 5:18 pm IST

மகளிருக்கான குத்துச்சண்டை 48 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை நித்து கங்காஸ் பதக்கத்தை உறுதி செய்தார்

Aug 03, 2022, 4:51 pm IST

மகளிர் ஹாக்கி போட்டி - இந்தியா, கனடாவுக்கு இடையிலான ஆட்டத்தின் 45 நிமிட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்துள்ளன

Aug 03, 2022, 4:00 pm IST

காமன்வெல்த் ஜூடோ மகளிருக்கான 78 கலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை துலிகா அரையிறுதிக்கு முன்னேற்றம். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் பதக்கம் நிச்சயம்

Aug 03, 2022, 3:48 pm IST

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்று 10.30 மணிக்கு பார்பிடாஸ் அணியை எதிர்கொள்கிறது

Aug 03, 2022, 3:48 pm IST

காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு இன்று 5 பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு

Aug 03, 2022, 3:48 pm IST

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வாழ்வா சாவா ஆட்டத்தில் கனடாவுடன் தற்போது விளையாடி வருகிறது

Aug 03, 2022, 12:15 pm IST

காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கான போட்டிகள் இன்று மதியம் 1 மணி முதல் நடைபெறவுள்ளது

Aug 03, 2022, 12:15 pm IST

முதல் போட்யில் ஆடவருக்கான லான் பவுல்ஸில் இந்தியா - போக்லாந்து தீவுகள் அணி மோதுகின்றன

Aug 03, 2022, 12:36 am IST

காமன்வெல்த் ஸ்குவாஷ் ஆடவருக்கான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரவ் கோஸல் 9-11 , 4-11, 1-11 என்ற கணக்கில் தோல்வி. நாளை வெண்கலப் பதக்கத்திற்காக விளையாடுவார்

Aug 03, 2022, 12:35 am IST

காமன்வெல்த் ஆடவருக்கான குத்துச்சண்டை போட்டியின் 67 கிலோ எடைப் பிரிவில் ரோகித் காலிறுதிக்கு தகுதி. இதுவரை 9 இந்திய குத்துச்சண்டை வீரர்கள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்

Aug 03, 2022, 12:35 am IST

பேட்மிண்டன் கலப்பு குழுவிற்கான இறுதிச் சுற்றில் பிவி சிந்து வெற்றி. இதில் மற்ற வீரர்கள் வென்றால் தங்கம் கிடைக்க வாய்ப்பு. இல்லை என்றாலும் வெள்ளி கிடைக்கும்

Aug 02, 2022, 9:09 pm IST

ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தய அணி சிங்கப்பூரை விழ்த்தி தங்கம் வென்றது

Aug 02, 2022, 9:08 pm IST

பளுதூக்கும் பிரிவில் ஆடவருககான 96 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் விகாஷ் வெள்ளி வென்றார்

Aug 02, 2022, 7:01 pm IST

இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 17 - 10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது

Aug 02, 2022, 7:01 pm IST

மகளிருக்கான லான் பவுல்ஸ் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது இந்திய அணி

Aug 02, 2022, 3:31 pm IST

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 8.05 மீ தாண்டி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்

Aug 02, 2022, 10:56 am IST

காமன்வெல்த் போட்டியில் 5வது நாளில் இந்தியா 8 பதக்கங்களுக்காக விளையாடுகிறது

Aug 02, 2022, 10:54 am IST

ஆடவருக்கான பளுதூக்கும் போட்டியில் மாலை 6.30 மணிக்கு விகாஷ் தாக்கூர் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்

Aug 02, 2022, 10:05 am IST

காமன்வெல்த் போட்டியில் 5வது நாளில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இந்திய வீராங்கனை பூனம் யாதவ் பளுதூக்கும் பரிவு இறுதி போட்டியில் போட்டியிடுகிறார்

Aug 02, 2022, 10:05 am IST

இந்திய ஆடவர் அணி டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு வெண்கலப் பதக்கத்திற்காக மோதுகிறது

Aug 01, 2022, 7:17 pm IST

மகளிருக்கான ஜூடோ போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சுசீலா தேவி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Aug 01, 2022, 4:20 pm IST

3வது வாய்ப்பில் 180 கிலோ எடையை தூக்க முயன்று அஜய் சிங் ஏமாற்றம்; வெள்ளிப் பதக்கமாவது கிடைக்குமா என எதிர்பார்ப்பு

Aug 01, 2022, 4:17 pm IST

தனது 2வது வாய்ப்பில் அஜய் சிங் 176 கிலோ எடையை தூக்கினர்; இங்கிலாந்து வீரர் கிறிஸ் முர்ரே 178 கிலோவை தூக்கியதால் கடும் போட்டி

Aug 01, 2022, 4:14 pm IST

க்ளீன் & ஜெர்க் சுற்றின் முதல் வாய்ப்பில் 172 கிலோ எடையை தூக்கினார் அஜய் சிங்

Aug 01, 2022, 3:57 pm IST

லான் பவுல்ஸ் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 16 - 13 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி

Aug 01, 2022, 3:56 pm IST

இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பதால் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது

Aug 01, 2022, 3:37 pm IST

ஸ்நாட்ச் பிரிவில் 2வது இடம் பிடித்து அஜய் சிங் அசத்தியுள்ளார்; க்ளீன் & ஜெர்க் பிரிவில் சிறப்பாக தூக்கினால் தங்கம் வெல்ல வாய்ப்பு

Aug 01, 2022, 3:13 pm IST

ஸ்நாட்ச் சுற்றின் 3வது வாய்ப்பில் அஜய் சிங் 143 கிலோ எடையை தூக்கினார்

Aug 01, 2022, 3:12 pm IST

பளுதூக்குதலில் தனது 2வது வாய்ப்பில் 140 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கினார் அஜய் சிங்

Aug 01, 2022, 2:56 pm IST

ஸ்னாட்ச் சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 137 கிலோ எடையை தூக்கி அஜய் சிங் அசத்தல்

Aug 01, 2022, 2:55 pm IST

ஆண்கள் 81கிலோ பிரிவுக்கான பளுதூக்குதல் இறுதிப்போட்டி தொடங்கியது

Aug 01, 2022, 2:55 pm IST

இந்திய வீரர் அஜய் சிங் தங்கப்பதக்கத்தை நோக்கி முயற்சி செய்து வருகிறார்

Story first published: Tuesday, August 9, 2022, 19:43 [IST]
Other articles published on Aug 9, 2022
English summary
Commonwealth Games (காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்) 2022 LIVE News Updates in Tamil: Catch up all the Live News Updates on CWC (Common Wealth Games) 2022 including schedule, match results, highlights, medals tally, Indian match & results, and much more in tamil at myKhel Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X