For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த்: காயத்தின் போதும் 138 கி எடை தூக்க முயற்சி.. வெள்ளிப்பதக்கம் வென்றார் சான்கெட் சர்கார்

பிர்மிங்கம்: காமன்வெல்த் 2022 தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்றுக்கொடுத்து அசத்தியுள்ளார் சான்கட் சார்கர்.

உலகப்புகழ்பெற்ற காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் நாளான நேற்று இந்தியாவுக்கு எந்தவித பதக்கமும் கிடைக்காமல் இருந்த நிலையில் இன்று பதக்க வேட்டை தொடங்கியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்: ஒரு செஸ் போர்ட் விலை ரூ.30,000.. தலைசுற்ற வைக்கும் எண்ணிக்கை.. அப்படி என்ன ஸ்பெஷல்செஸ் ஒலிம்பியாட்: ஒரு செஸ் போர்ட் விலை ரூ.30,000.. தலைசுற்ற வைக்கும் எண்ணிக்கை.. அப்படி என்ன ஸ்பெஷல்

பளுதூக்குதல்

பளுதூக்குதல்

ஆண்களுக்கான 55 கிலோ எடை பிரிவில் பளுதூக்குதல் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் சான்கெட் மகாதேவ் சர்கார் கலந்துக்கொண்டார். ஒவ்வொரு வீரருக்கும் ஸ்னாட்ச் சுற்றில் 3 வாய்ப்புகளும், க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் 3 வாய்ப்புகளும் கொடுக்கப்படும். அதன்படி ஸ்னாட்ச் சுற்றில் சான்கெட் சர்கார் முதல் வாய்ப்பில் 55 கிலோ, 2வது வாய்ப்பில் 111 கிலோவை தூக்கி முதலிடத்தில் இருந்தார்.

பிரகாச வாய்ப்பு

பிரகாச வாய்ப்பு

ஸ்னாட்ச் பிரிவின் 3வது வாய்ப்பில் மிகவும் ஆக்ரோஷமாக தூக்கிய சான்கெட், 113 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை நோக்கி நகர்ந்தார். தேசிய அளவில் 113 கிலோ எடையை தூக்கி சான்கெட் சாதனை படைத்திருந்தார். தற்போது காமன்வெல்த் போட்டியில் மீண்டும் அதே எடையை தூக்கி அசத்தினார்.

துரதிஷ்டவசம்

துரதிஷ்டவசம்

இதனை தொடர்ந்து நடைபெற்ற க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றிலும் அவர் முதலிடம் பிடித்து தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே முதல் வாய்ப்பில் 135 கிலோ எடையை தூக்கி மீண்டும் தங்கப்பதக்க வாய்ப்பை தக்கவைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக 2வது வாய்ப்பின் போது சான்கெட்டிற்கு காயம் ஏற்பட்டது. 138 கிலோ எடையை தூக்க முயன்ற போது காயத்தால் பாதிக்கப்பட்டார்.

துணிச்சல் முடிவு

துணிச்சல் முடிவு

எனினும் மனம் தளராமல் 3வது வாய்ப்பில் தூக்குவதற்காக துணிச்சலுடன் களமிறங்கினால். எனினும் அவரால் முடியாமல் போனது. இதனையடுத்து மலேஷிய வீரருக்கு தங்கப்பதக்கமும், சான்கெட் வெள்ளிப்பதக்கமும் வென்றார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 30, 2022, 16:31 [IST]
Other articles published on Jul 30, 2022
English summary
Sanket Sargar won silver medal in Commonwealth games 2022 ( காமன்வெல்த் போட்டிகள் ) காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் சான்கெட் சர்கார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X