காமன்வெல்த் 2026: பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்.. பிந்தாராணி வெண்கலம் வென்றார்
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் பிந்தியாராணி தேவி சொரோக்பாம் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா பெறும் ஐந்தாவது பதக்கம் இதுவாகும்.
முன்னதாக, மீராபாய் சானு பெண்கள் 48 கிலோ பிரிவில் தங்கம், ரிஷிகாந்தா சிங் ஆண்கள் 60 கிலோ பிரிவில் வெள்ளி, முத்துப்பாண்டி ராஜா ஆண்கள் 65 கிலோ பிரிவில் வெள்ளி மற்றும் ஞானேஸ்வரி யாதவ் பெண்கள் 53 கிலோ பிரிவில் வெள்ளி ஆகியோர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பளுதூக்குதல் போட்டி ஸ்நாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் என இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இதில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்.ஸ்நாட்ச் பிரிவில், வீராங்கனைகள் பார்பெல் எடையை ஒரே தொடர்ச்சியான நகர்வில் தரையிலிருந்து தலைக்கு மேலே தூக்க வேண்டும். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில், முதலில் எடையைத் தோள்பட்டை வரை தூக்கி நிறுத்தி பின்னர் தலைக்கு மேலே தள்ளி பசர் ஒலிக்கும் வரை நிலையாக வைத்திருக்க வேண்டும்.
போட்டியின் ஸ்நாட்ச் பிரிவில் பிந்தியாராணி 87 கிலோ எடையைத் தூக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இப்பிரிவில் நைஜீரியாவின் ரஃபியாத்து ஃபோலாஷடே 103 கிலோ எடையுடன் முதலிடத்திலும், கனடாவின் ஆன் சோஃபி 83 கிலோவுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில், பிந்தியாராணி வெற்றிகரமாக 112 கிலோ எடையைத் தூக்கினார். எனினும், நைஜீரியாவின் ரஃபியாத்து 122 கிலோ எடையைத் தூக்கித் தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இதனால் இந்திய வீராங்கனை பிந்தியாராணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
ஒட்டுமொத்தமாக பிந்தியாராணி 199 கிலோ ஸ்நாட்ச் 87 கிலோ + கிளீன் அண்ட் ஜெர்க் 112 கிலோ எடையைத் தூக்கினார். ஆனால், மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நைஜீரியாவின் ரஃபியாத்து ஃபோலாஷடே ஒட்டுமொத்தமாக 225 கிலோ எடையைத் தூக்கி, காமன்வெல்த் சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். கனடாவின் ஆன் சோஃபி ஒட்டுமொத்தமாக 215 கிலோ (எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா பெறும் ஐந்தாவது பதக்கமாகவும், ஒட்டுமொத்தப் போட்டிகளில் இந்தியாவின் ஆறாவது பதக்கமாகவும் இது அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications

