காமன்வெல்த் 2026 ஜூலை 25 இந்தியா ஆடும் போட்டிகள்.. பதக்கம் வெல்ல வாய்ப்பு.. முழு அட்டவணை
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 3வது நாளில் (ஜூலை 25 சனிக்கிழமை) ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், குத்துச்சண்டை, லான் பவுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகள் சிலவற்றில் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் உள்ளது.

இந்திய வீரர்களின் 3வது நாள் போட்டி அட்டவணை (இந்திய நேரப்படி):
ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்:
• இரவு 8:15 மணி: பெண்கள் அணி இறுதிப்போட்டி மற்றும் தனிநபர் தகுதிச் சுற்று (சப்டிவிஷன் 1) - பிரணதி நாயக், நிஷ்கா அகர்வால், எஷிதா ரேவாலே, பிரதிஷ்டா சமந்தா.
லான் பவுல்ஸ் மற்றும் பாரா பவுல்ஸ்:
• பிற்பகல் 3:50 மணி: பெண்கள் இரட்டையர் பிரிவு (பிரிவு பி) - இந்தியா (ரூபா ராணி திர்கி, பிங்கி சிங்) vs டோங்கா (பாரிஸ் பேக்கர், மிலிகா நாதன்).
• மாலை 7:30 மணி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு (பிரிவு டி) - புதுல் சோனோவால் vs இசத் சுல்கெப்லே (மலேசியா).
குத்துச்சண்டை:
• மாலை 4:00 மணி: ஆண்கள் 60 கிலோ பிரிவு (சுற்று 32) - சச்சின் சிவாச் vs கியோமா அல்-அகமதியா (கனடா).
நீச்சல் மற்றும் பாரா நீச்சல்:
• மாலை 4:19 மணி முதல்: ஆண்கள் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தகுதிச் சுற்று - தக்ஷன் சசிகுமார் (ஹீட் 3), ஆர்யன் நெஹ்ரா (ஹீட் 4).
• இரவு 11:37 மணி: ஆண்கள் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் இறுதிப்போட்டி - தக்ஷன் சசிகுமார், ஆர்யன் நெஹ்ரா (தகுதி பெறும் பட்சத்தில் - பதக்கப் போட்டி).
• நள்ளிரவு 12:19 மணி: ஆண்கள் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் இறுதிப்போட்டி - ஸ்ரீஹரி நட்ராஜ் (தகுதி பெறும் பட்சத்தில் - பதக்கப் போட்டி).
3x3 வீல்சேர் கூடைப்பந்து:
• மாலை 4:35 மணி: பெண்கள் பிரிவு (பூல் பி) - வேல்ஸ் vs இந்தியா (லக்ஷ்மி ராயன்னவர், ரிது இரெங்க்பாம், ரீனா குப்தா, மீனாட்சி ஜாதவ்).
நேரலைத் தகவல்கள்:
இந்தப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலிலும், இணையதளம் அல்லது மொபைல் மூலம் ஸ்ட்ரீமிங் செய்து பார்க்க விரும்புபவர்கள் சோனி லிவ் செயலி அல்லது இணையதளத்தில் நேரலையாகக் கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications
