காமன்வெல்த் 2026 ஜூலை 26 இந்தியா போட்டிகள்.. IND vs PAK குத்துச்சண்டை.. மீராபாய் சானு பளுதூக்குதல்
கிளாஸ்கோ: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் 4வது நாளில் (ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் குறித்து பார்க்கலாம். தங்கம் வெல்லும் வாய்ப்பு உள்ள இந்திய ஒலிம்பிக் நாயகி மீராபாய் சானு பளுதூக்குதலில் களமிறங்குகிறார். மேலும் குத்துச்சண்டையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலும் நடைபெறுகிறது.
இதுவரை இந்தியா பாரா பவர்லிஃப்டிங்கில் ஜாண்டு குமார் மூலம் ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்றுத் தர வாய்ப்பு உள்ள பளுதூக்குதல் போட்டிகள் தொடங்கி இருக்கின்றன.

49 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் மீராபாய் சானுவும், 60 கிலோ பிரிவில் ரிஷிகான்தா சிங்கும், 65 கிலோ பிரிவில் எம் ராஜாவும் களம் இறங்குகின்றனர். மேலும், ஒரு சுவாரசியமாக குத்துச்சண்டையில் பாகிஸ்தான் வீரரை எதிர்த்து இந்திய வீரர் ஜடுமணி சிங் மோத உள்ளார்.
இந்திய வீரர்களின் 4வது நாள் போட்டி அட்டவணை (ஜூலை 26 - இந்திய நேரப்படி):
• மதியம் 1:00 மணி (லான் பவுல்ஸ்): பெண்கள் இரட்டையர் பிரிவு - இந்தியா (ரூபா ராணி திர்கி, பிங்கி சிங்) vs நமீபியா.
• மதியம் 2:00 மணி (பளுதூக்குதல் - பதக்கப் போட்டி): ஆண்கள் 60 கிலோ பிரிவு இறுதிப்போட்டி - ரிஷிகான்தா சிங்.
• மாலை 4:30 மணி (ஜிம்னாஸ்டிக்ஸ் - பதக்கப் போட்டி): ஆண்கள் தனிநபர் இறுதிப்போட்டி - யோகேஷ்வர் சிங், தபன் மொஹந்தி.
• மாலை 4:39 மணி (நீச்சல்): ஆண்கள் 4x200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே தகுதிச் சுற்று - ஸ்ரீஹரி நட்ராஜ், ஆர்யன் நெஹ்ரா, அனீஷ் கௌடா, தக்ஷன் சசிகுமார்.
• மாலை 5:30 மணி (பளுதூக்குதல் - பதக்கப் போட்டி): பெண்கள் 49 கிலோ பிரிவு இறுதிப்போட்டி - மீராபாய் சானு.
• இரவு 7:15 மணி (லான் பவுல்ஸ்): ஆண்கள் ஒற்றையர் பிரிவு - புதுல் சோனோவால் vs ஷான் ஜேம்ஸ் (மால்டா).
• இரவு 10:30 மணி (ஜிம்னாஸ்டிக்ஸ் - பதக்கப் போட்டி): பெண்கள் தனிநபர் இறுதிப்போட்டி (இந்திய வீராங்கனைகள் பங்கேற்பது தகுதியின் அடிப்படையில்).
• இரவு 10:45 மணி (குத்துச்சண்டை): பெண்கள் 54 கிலோ பிரிவு (சுற்று 16) - பிரீதி பவார் vs டெபோரா (மலாவி).
• இரவு 11:00 மணி (பளுதூக்குதல் - பதக்கப் போட்டி): ஆண்கள் 65 கிலோ பிரிவு இறுதிப்போட்டி - எம் ராஜா.
• இரவு 11:45 மணி (குத்துச்சண்டை): ஆண்கள் 55 கிலோ பிரிவு (சுற்று 16) - ஜடுமணி சிங் vs சுமாமா ரஹ்மான் (பாகிஸ்தான்).
• நள்ளிரவு 12:45 மணி (குத்துச்சண்டை): ஆண்கள் 65 கிலோ பிரிவு (சுற்று 16) - ஆதித்யா பிரதாப் யாதவ் vs நூஹு பாட்டே (உகாண்டா).
• நள்ளிரவு 1:56 மணி (நீச்சல் - பதக்கப் போட்டி): ஆண்கள் 4x200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே இறுதிப்போட்டி (தகுதி பெறும் பட்சத்தில்).


Click it and Unblock the Notifications