காமன்வெல்த் பதக்கப்பட்டியல்.. ஒரே நாளில் 3 பதக்கம்.. இந்தியா எந்த இடம்? முதல் இடத்தில் ஆஸ்திரேலியா
கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 4வது நாளில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். மேலும், பளுதூக்குதலில் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றதை அடுத்து, இந்திய அணி ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
பெண்களுக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தொடர்ந்து 3வது முறையாகத் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இது நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கமாகும். அதேபோல், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

முன்னதாக, ஆண்கள் 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் ரிஷிகன்டா சிங் வெள்ளிப் பதக்கமும், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரா பவர்லிஃப்டிங் போட்டியில் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கினர்.
தற்போது இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 17 தங்கம் உள்பட 39 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
2026 காமன்வெல்த் பதக்கப் பட்டியல் (முதல் 10 நாடுகள் - ஜூலை 26 முடிவில்):
-
ஆஸ்திரேலியா - 17 தங்கம் - 9 வெள்ளி - 13 வெண்கலம் - 39 பதக்கங்கள்
-
இங்கிலாந்து - 4 தங்கம் - 9 வெள்ளி - 6 வெண்கலம் - 19 பதக்கங்கள்
-
ஸ்காட்லாந்து - 4 தங்கம் - 2 வெள்ளி - 0 வெண்கலம் - 6 பதக்கங்கள்
-
நைஜீரியா - 3 தங்கம் - 4 வெள்ளி - 0 வெண்கலம் - 7 பதக்கங்கள்
-
கனடா - 3 தங்கம் - 3 வெள்ளி - 3 வெண்கலம் - 9 பதக்கங்கள்
-
தென்னாப்பிரிக்கா - 3 தங்கம் - 2 வெள்ளி - 4 வெண்கலம் - 9 பதக்கங்கள்
-
மலேசியா - 1 தங்கம் - 1 வெள்ளி - 1 வெண்கலம் - 3 பதக்கங்கள்
-
இந்தியா - 1 தங்கம் - 2 வெள்ளி - 1 வெண்கலம் - 4 பதக்கங்கள்
-
நியூசிலாந்து - 0 தங்கம் - 3 வெள்ளி - 2 வெண்கலம் - 5 பதக்கங்கள்
-
வேல்ஸ் - 0 தங்கம் - 1 வெள்ளி - 3 வெண்கலம் - 4 பதக்கங்கள்


Click it and Unblock the Notifications