Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் விளையாட்டு 2026: இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை.. நேரம், வீரர்கள் பட்டியல்

கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் போட்டிகள் 2026 ஜூலை 23 முதல் கிளாஸ்கோவில் தொடங்குகிறது. இந்த 11 நாட்கள் நடைபெறும் விளையாட்டுத் திருவிழாவில் 74 நாடுகளில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட வீரர்கள் 11 விளையாட்டுகளில் உள்ள 215 பதக்கப் பிரிவுகளில் போட்டியிடவுள்ளனர். இந்தியாவின் சார்பில் நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் உட்பட 125 வீரர்கள் அடங்கிய இந்திய அணி இந்த முறை களம் காண்கிறது.

கிளாஸ்கோ இன்டர்நேஷனல் அரினா, ஸ்காட்டிஷ் ஈவென்ட் கேம்பஸ், ஸ்காட்ஸ்டவுன் ஸ்டேடியம் மற்றும் டோல்கிராஸ் இன்டர்நேஷனல் நீச்சல் மையம் ஆகிய நான்கு முக்கிய அரங்குகளில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிகளின் முதல் நாளான ஜூலை 23, வியாழக்கிழமை அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2:00 மணி முதல் பவுல்ஸ் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் புத்துல் சோனாவால் கனடா வீரரையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் ரூபா ராணி திர்கே மற்றும் பிங்கி சிங் ஜோடி மால்டா அணியையும் எதிர்கொள்கின்றனர்.

CWG India schedule

தொடர்ந்து ஜூலை 24, வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3:30 மணிக்கு பாக்ஸிங் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் மகளிர் 54 கிலோ பிரிவில் பிரீத்தி பவார், 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா ஆகியோரும், ஆடவர் 70 கிலோ பிரிவில் சுமித் குண்டு, 55 கிலோ பிரிவில் ஜெடுமணி சிங் ஆகியோரும் களமிறங்குகின்றனர். அன்றைய தினம் மாலை 5:30 மணிக்கு நடைபெறும் பாரா பவர்லிஃப்டிங் இறுதிப்போட்டிகளில் ஆடவர் லைட்வெயிட் பிரிவில் அசோக் மாலிக் மற்றும் பரம்ஜீத் குமாரும், மகளிர் லைட்வெயிட் பிரிவில் சுமன் தேவி மற்றும் ஜஸ்பிரீத் கவுரும் போட்டியிடுகின்றனர்.

மேலும் இரவு 10:30 மணி முதல் மகளிர் 60 கிலோ குத்துச்சண்டைப் பிரிவில் பிரியா கங்காஸும், பாரா பவர்லிஃப்டிங் ஹெவிவெயிட் பிரிவில் கஸ்தூரி ராஜாமணி, சுதிர் மற்றும் ஜந்து குமார் ஆகியோரும் பதக்கங்களுக்காகப் போராடவுள்ளனர். ஜூலை 25, சனிக்கிழமை அன்று பிற்பகல் 1:00 மணி முதல் பவுல்ஸ் போட்டிகளில் புத்துல் சோனாவால், ரூபா ராணி மற்றும் பிங்கி சிங் ஆகியோர் தொடர்ந்து விளையாடுகின்றனர்.

பிற்பகல் 2:30 மணி முதல் 3X3 கூடைப்பந்து மற்றும் வீல்சேர் கூடைப்பந்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதுகிறது. அதே நேரத்தில் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தகுதிச்சுற்றில் பிரணதி நாயக், நிஷ்கா அகர்வால், ஈஷிதா ரேவாலே மற்றும் பிரதிஸ்தா சமந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 3:00 மணி முதல் தொடங்கும் நீச்சல் தகுதிச்சுற்றுகளில் தக்ஷன் சசிகுமார் மற்றும் சைதன்யா குல்கர்னி தேஜஸ் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மாலை 3:30 மணிக்கு மகளிர் குத்துச்சண்டை தகுதிச்சுற்றில் பர்வீன் ஹூடா மற்றும் அருந்ததி சவுத்ரி ஆகியோரும், இரவு 10:30 மணி முதல் லவ்லினா போர்கோஹெய்ன், சச்சின் சிவாக், ஆதித்ய பிரதாப் சிங் மற்றும் அங்குஷ் ஆகியோரும் களம் காண்கின்றனர். ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை அன்று பவுல்ஸ் போட்டிகளுடன், மதியம் 2:00 மணிக்கு ஆடவர் 60 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் ரிஷிகாந்தா சிங் பங்கேற்கிறார். மாலை 3:30 மணிக்கு குத்துச்சண்டையில் கபில் போகாரியா, நரிந்தர் பெர்வால் ஆகியோரும், மாலை 6:30 மணிக்கு மகளிர் 48 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானுவும் களம் காண்கின்றனர்.

இரவு 9:30 மணிக்கு மகளிர் 3×3 வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. மேலும், இரவு 11:00 மணிக்கு ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் எம்.ராஜா பங்கேற்கிறார். ஜூலை 27, திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணி முதல் தடகளப் போட்டிகள் தொடங்குகின்றன. ஆடவர் நீளம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் முரளி ஸ்ரீசங்கர் மற்றும் லோகேஷ் சத்யநாதன் ஆகியோரும், மகளிர் உயரம் தாண்டுதலில் பூஜா சிங்கும், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தேஜஸ் ஷிர்சேயும், 100 மீட்டர் ஓட்டத்தில் குரிந்தர்வீர் சிங்கும், பாரா தடகள பிரிவுகளில் ராகேஷ்பாய் பட், ஸ்ரேயான்ஸ் திரிவேதி ஆகியோரும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் யஷாஸ் பாலக்ஷா, சந்தோஷ் தமிழரசன் ஆகியோரும் களம் காண்கின்றனர்.

நீச்சலில் சாஜன் பிரகாஷ் மற்றும் குத்துச்சண்டையில் சாக்ஷி சவுத்ரி ஆகியோரும் பங்கேற்கின்றனர். மாலை 5:30 மணிக்கு பளுதூக்குதலில் ஞானேஸ்வரி யாதவ் மற்றும் பிந்த்யாராணி தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இரவு 9:30 மணிக்கு 3×3 வீல்சேர் கூடைப்பந்தில் இந்திய அணி நைஜீரியாவை எதிர்கொள்கிறது. இரவு 11:00 மணிக்கு குண்டு எறிதலில் ஷர்மிளா தங்கர், ஷில்பா கே ஷைலா ஆகியோரும், உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரே, ஆதர்ஷ் ராம், தேஜஸ்வின் சங்கர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

ஜூலை 28, செவ்வாய்க்கிழமை தடகளப் போட்டிகளில் சீமா புனியா, நிதி ராணி, மன்பிரீத் கவுர், விஷால் கீழ்விழி, ராஜேஷ் ரமேஷ், ரஷ்தீப் கவுர், பாபு ஆகியோர் தத்தமது பிரிவுகளில் களம் காண்கின்றனர். நீச்சலில் ஸ்ரீஹரி நடராஜ், பவுல்ஸ் போட்டிகளில் நவ்நீத் சிங், தினேஷ் குமார், நயன்மோனி சைகியா ஆகியோரும், பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுரும், 10,000 மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங்கும் போட்டியிடுகின்றனர்.

ஜூலை 29, புதன்கிழமை அன்று தடகளப் போட்டிகளில் சமர்தீப் கில், தஜிந்தர்பால் தூர், முகமது பாசில், திலீப் காவித், அனிமேஷ் குஜூர் ஆகியோரும், நீச்சலில் ஆர்யன் நெஹ்ரா, அனிஷ் கவுடா, ரவி புடிகினா, சுயாஷ் ஜாதவ், ஸ்வதிக் பாட்டீல் ஆகியோரும் பங்கேற்கின்றனர். பளுதூக்குதலில் சஞ்சனா, தில்பாக் சிங், செராம் நிருபமா தேவி ஆகியோரும், தடகளத்தில் பாரூல் சவுத்ரி, தேவேந்தர் குமார், சாகர் தாயத் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

ஜூலை 30, வியாழக்கிழமை அன்று டிராக் சைக்கிள் ஓட்டுதலில் சேகோன் சிங்கும், ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ், யஷ் வீர் சிங் ஆகியோரும் களமிறங்குகின்றனர். போல் வால்ட்டில் தேவ் மீனா, குல்தீப் குமார் ஆகியோரும், மும்முறை தாண்டுதலில் (டிரிபிள் ஜம்ப்) பிரவீன் சித்திரவேல், செல்வ பிரபு ஆகியோரும் போட்டியிடுகின்றனர். டெக்கத்லான் போட்டிகளில் தேஜஸ்வின் சங்கர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கிறார். பளுதூக்குதலில் மார்டினா தேவி மற்றும் லவ்பிரீத் சிங் ஆகியோரும், மகளிர் 5000 மீட்டர் ஓட்டத்தில் பாரூல் சவுத்ரி இறுதிப் போட்டியிலும் பங்கேற்கின்றனர்.

ஜூலை 31, வெள்ளிக்கிழமை அன்று தடகளத்தில் கலப்பு 4x400 மீட்டர் ரிலே தகுதிச்சுற்றும், தேஜஸ்வின் சங்கரின் டெக்கத்லான் இறுதி விளையாட்டுகளும் நடைபெறவுள்ளன. சைக்கிள் ஓட்டுதலில் தினேஷ் குமார், ரோஜித் யாங்லெம், டேவிட் எல்கடோச்சங்கோ மற்றும் ஜேம்ஷ் கீதெல்க்ராம் ஆகியோரும், ஜூடோ போட்டிகளில் அஸ்மிதா தேய், ஸ்ரத்தா சோபாடே, யாமினி மௌரியா, ஹர்ஷ் சிங், ரோஹித் மஜ்குல் ஆகியோரும் களமிறங்குகின்றனர்.

ஆகஸ்ட் 1, சனிக்கிழமை தடகளத்தில் ஷுபம் ஜுயல், சோமன் ராணா, ரமேஷ் சண்முகம், பிரியங்கா கோஸ்வாமி, ரவினா கெய்க்வாட் மற்றும் குல்வீர் சிங் ஆகியோர் பதக்கங்களுக்காக போட்டியிடுகின்றனர். ஜூடோவில் அருண் குமார், உன்னதி சர்மா, ஹர்ஷ் தோகாஸ், இனுங்கன்பி தாகெல்லம்பம், கரஞ்சித் சிங் மான் ஆகியோரும் களமிறங்குகின்றனர். இறுதி நாளான ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை அன்று சைக்கிள் ஓட்டுதலில் ரொனால்டோ லைட்டோஞ்ஜம் மற்றும் ஜூடோவில் அவதார் சிங், யாஷ் கங்காஸ், இஷ்ரூப் நரங், துலிகா மான் ஆகியோர் பதக்கச் சுற்றுகளில் பங்கேற்கின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு 2026: 2 இந்திய வீராங்கனைகளுக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்

காமன்வெல்த் விளையாட்டு 2026: 2 இந்திய வீராங்கனைகளுக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்

இந்த போட்டிகளில் நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு, பிரீத்தி பவார் மற்றும் சர்வேஷ் குஷாரே போன்ற இந்திய வீரர்கள் பல பதக்கங்களை வெல்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட், ஹாக்கி போன்ற போட்டிகள் இம்முறை சேர்க்கப்படவில்லை. செலவீனங்களை காரணம் காட்டி வெறும் 11 விளையாட்டுகள் தான் இம்முறை நடத்தப்படுகிறது.

Story first published: Tuesday, July 21, 2026, 21:45 [IST]
Other articles published on Jul 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+