Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் 2026.. லவ்பிரீத் சிங்கிற்கு வெள்ளி.. வட்டு எறிதலில் சீமாவிற்கு வெண்கலம்

கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான ஜூலை 30 அன்று, இந்தியா மேலும் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 17 ஆக (3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம்) உயர்ந்துள்ளது.

ஆண்களுக்கான +110 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இவர் ஸ்நாட்ச் பிரிவில் 176 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை நிகழ்த்தினார். தொடர்ந்து கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 212 கிலோ எடையையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 388 கிலோ எடையுடன் முதலிடத்தில் இருந்தார்.

Commonwealth Games 2026 Lovepreet Singh Wins Silver Seema Claims Bronze in Discus Throw

எனினும், நியூசிலாந்தின் டேவிட் ஆண்ட்ரூ லிட்டி கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் புதிய சாதனையாக 223 கிலோ எடையைத் தூக்கி, ஒட்டுமொத்தமாக 389 கிலோவுடன் 1 கிலோ வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தைக் தட்டிச் சென்றார். லவ்பிரீத் சிங் தனது இறுதி முயற்சியில் 217 கிலோ தூக்க முயன்று தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்திய பளுதூக்குதல் அணி 1 தங்கம், 6 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களுடன் தனது காமன்வெல்த் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இதையடுத்து நடைபெற்ற மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனுபவ வீராங்கனை சீமா வெண்கலப் பதக்கம் வென்றார். தனது மூன்றாவது முயற்சியில் 58.65 மீட்டர் தூரம் வீசி அவர் இந்த பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஜமைக்காவின் சமந்தா ஹால் 61.66 மீட்டர் வீசி தங்கமும், கனடாவின் ஜூலியா டங்க்ஸ் 60.67 மீட்டர் வீசி வெள்ளியும் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனையான நிதி ராணி 57.10 மீட்டர் தூரம் வீசி 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

காமன்வெல்த் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.. ஆனால் 5வது இடம் மட்டுமே!

காமன்வெல்த் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.. ஆனால் 5வது இடம் மட்டுமே!

முன்னதாக பர்மிங்காம் காமன்வெல்த் தொடரில் வெண்கலம் வென்றிருந்த லவ்பிரீத் சிங், இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்று தனது திறமையை மேம்படுத்தியுள்ளார். காமன்வெல்த் விளையாட்டின் 8-வது நாளில் இரண்டு பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

"வைபவ் சூர்யவன்ஷி இந்திய கேப்டன் ஆகலாம் அப்போது..".. துலீப் டிராபி தேர்வு குழு சொன்ன விளக்கம்
Story first published: Friday, July 31, 2026, 7:34 [IST]
Other articles published on Jul 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+