நீரஜ் சோப்ரா தலைமையில் 126 பேர் கொண்ட இந்திய காமன்வெல்த் அணி அறிவிப்பு.. விளையாட்டுடன் முழு பட்டியல்
டெல்லி: 2026ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த விளையாட்டு தொடருக்கு தகுதி பெற்றுள்ள 126 வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த அனுமதி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வாரியான பட்டியல் மற்றும் வீரர்களின் விரிவான பெயர்ப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை கிளாஸ்கோ நகருக்கு செல்லும் இந்தியக் குழுவில் 78 ஆண்கள், 48 பெண்கள் என மொத்தம் 126 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர 51 பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள், 14 குழு அதிகாரிகள் என ஒட்டுமொத்தமாக 191 பேர் கொண்ட குழுவினர் இந்தியாவிலிருந்து புறப்பட உள்ளனர். இந்த ஒட்டுமொத்த இந்திய குழுவிற்கான முதன்மை நிர்வாகியாக ரோஹித் ராஜ்பால் நியமிக்கப்பட்டுள்ளார். ரவி பெங்கானி, வந்தனா ராவ் மற்றும் ராகுல் சுவாமி ஆகியோர் துணை நிர்வாகிகளாக செயல்பட உள்ளனர்.

பதக்க எதிர்பார்ப்பு
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்குகிறார். அவரைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பழுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் இந்திய அணியின் நட்சத்திரங்களாக முன்னிலை வகிக்கின்றனர்.
விளையாட்டு வாரியாக ஆண் மற்றும் பெண் வீரர்களின் எண்ணிக்கை பட்டியல்:
- தடகளம்: 22 ஆண்கள் - 10 பெண்கள் - மொத்தம் 32 வீரர்கள்
- குத்துச்சண்டை: 7 ஆண்கள் - 7 பெண்கள் - மொத்தம் 14 வீரர்கள்
- டிராக் சைக்கிளிங்: 6 ஆண்கள் - 0 பெண்கள் - மொத்தம் 6 வீரர்கள்
- ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்: 4 ஆண்கள் - 4 பெண்கள் - மொத்தம் 8 வீரர்கள்
- ஜூடோ: 7 ஆண்கள் - 7 பெண்கள் - மொத்தம் 14 வீரர்கள்
- லான் பௌல்ஸ்: 3 ஆண்கள் - 3 பெண்கள் - மொத்தம் 6 வீரர்கள்
- நீச்சல்: 5 ஆண்கள் - 0 பெண்கள் - மொத்தம் 5 வீரர்கள்
- பழுதூக்குதல்: 5 ஆண்கள் - 7 பெண்கள் - மொத்தம் 12 வீரர்கள்
- மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்: 9 ஆண்கள் - 2 பெண்கள் - மொத்தம் 11 வீரர்கள்
- 3x3 சக்கர நாற்காலி கூடைப்பந்து: 0 ஆண்கள் - 4 பெண்கள் - மொத்தம் 4 வீரர்கள்
- மாற்றுத்திறனாளிகளுக்கான பவர்லிஃப்டிங்: 4 ஆண்கள் - 3 பெண்கள் - மொத்தம் 7 வீரர்கள்
- மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல்: 6 ஆண்கள் - 0 பெண்கள் - மொத்தம் 6 வீரர்கள்
- மாற்றுத்திறனாளிகளுக்கான டிராக் சைக்கிளிங்: 0 ஆண்கள் - 1 பெண் - மொத்தம் 1 வீரர்
- ஒட்டுமொத்த எண்ணிக்கை: 78 ஆண்கள் - 48 பெண்கள் - மொத்தம் 126 வீரர்கள்
ஒட்டுமொத்த இந்திய வீரர்களின் முழுமையான தனிநபர் பட்டியல் (விளையாட்டு மற்றும் பிரிவு வாரியாக):
தடகளம் :
- குரிந்தர்வீர் சிங் - ஆண் - ஆண்கள் 100 மீட்டர் ஓட்டம்
- முரளி ஸ்ரீசங்கர் - ஆண் - ஆண்கள் நீளம் தாண்டுதல்
- பிரவீன் சித்ரவேல் - ஆண் - ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப்
- நீரஜ் சோப்ரா - ஆண் - ஆண்கள் ஈட்டி எறிதல்
- சமர்தீப் சிங் கில் - ஆண் - ஆண்கள் குண்டு எறிதல்
- ஆதர்ஷ் ராம் ஜோதி சங்கர் - ஆண் - ஆண்கள் உயரம் தாண்டுதல்
- அனிமேஷ் குஜூர் - ஆண் - ஆண்கள் 200 மீட்டர் ஓட்டம்
- குல்தீப் குமார் - ஆண் - ஆண்கள் போல் வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்)
- சர்வேஷ் அனில் குஷாரே - ஆண் - ஆண்கள் உயரம் தாண்டுதல்
- தேவ் குமார் மீனா - ஆண் - ஆண்கள் போல் வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்)
- யஷாஸ் பாலக்ஷா - ஆண் - ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம்
- ராஜேஷ் ரமேஷ் - ஆண் - ஆண்கள் 400 மீட்டர் ஓட்டம், கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்
- லோகேஷ் சத்யநாதன் - ஆண் - ஆண்கள் நீளம் தாண்டுதல்
- தேஜஸ்வின் சங்கர் - ஆண் - ஆண்கள் டெக்கத்லான், ஆண்கள் உயரம் தாண்டுதல்
- தேஜஸ் அசோக் ஷிர்ஸே - ஆண் - ஆண்கள் 110 மீட்டர் தடை ஓட்டம்
- குல்வீர் சிங் - ஆண் - ஆண்கள் 10000 மீட்டர் ஓட்டம், ஆண்கள் 5000 மீட்டர் ஓட்டம்
- யாஷ் வீர் சிங் - ஆண் - ஆண்கள் ஈட்டி எறிதல்
- சந்தோஷ் குமார் தமிழரசன் - ஆண் - ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம்
- விஷால் தென்னரசு கயல்விழி - ஆண் - ஆண்கள் 400 மீட்டர் ஓட்டம், கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்
- செல்வ பிரபு திருமாறன் - ஆண் - ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப்
- தஜிந்தர்பால் சிங் தூர் - ஆண் - ஆண்கள் குண்டு எறிதல்
- ரோஹித் யாதவ் - ஆண் - ஆண்கள் ஈட்டி எறிதல்
- மன்பிரீத் கவுர் - பெண் - பெண்கள் குண்டு எறிதல்
- பிரியங்கா - பெண் - பெண்கள் 10000 மீட்டர் நடைப்போட்டி
- ரவீனா - பெண் - பெண்கள் 10000 மீட்டர் நடைப்போட்டி
- ரஷிதீப் கவுர் - பெண் - கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்
- சீமா - பெண் - பெண்கள் வட்டு எறிதல்
- அன்சா பாபு - பெண் - கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்
- பருள் சவுத்ரி - பெண் - பெண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டம்
- நீரு பதக் - பெண் - கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்
- நிதி ராணி - பெண் - பெண்கள் வட்டு எறிதல்
- பூஜா - பெண் - பெண்கள் உயரம் தாண்டுதல்
குத்துச்சண்டை:
- ஜாஸ்மின் - பெண் - பெண்கள் 57 கிலோ ஃபெதர்வெயிட் எடை பிரிவு
- பிரீத்தி - பெண் - பெண்கள் 54 கிலோ பேண்டம் வெயிட் எடை பிரிவு
- பிரியா - பெண் - பெண்கள் 60 கிலோ லைட் வெயிட் எடை பிரிவு
- சாக்ஷி - பெண் - பெண்கள் 51 கிலோ ஃபிளை வெயிட் எடை பிரிவு
- லவ்லினா போர்கோஹெய்ன் - பெண் - பெண்கள் 75 கிலோ மிடில் வெயிட் எடை பிரிவு
- அருந்ததி சவுத்ரி - பெண் - பெண்கள் 70 கிலோ லைட்- மிடில் வெயிட் எடை பிரிவு
- பர்வீன் - பெண் - பெண்கள் 65 கிலோ வெல்டர் வெயிட் எடை பிரிவு
- அங்குஷ் - ஆண் - ஆண்கள் 80 கிலோ லைட்-ஹெவி வெயிட் எடை பிரிவு
- நரேந்தர் - ஆண் - ஆண்கள் 90+ கிலோ சூப்பர்-ஹெவி வெயிட் எடை பிரிவு
- சச்சின் - ஆண் - ஆண்கள் 60 கிலோ லைட் வெயிட் எடை பிரிவு
- சுமித் - ஆண் - ஆண்கள் 70 கிலோ லைட்-மிடில் வெயிட் எடை பிரிவு
- ஜடுமணி மண்டேங்பம் சிங் - ஆண் - ஆண்கள் 55 கிலோ பேண்டம் வெயிட் எடை பிரிவு
- கபில் பொகாரியா - ஆண் - ஆண்கள் 90 கிலோ ஹெவி வெயிட் எடை பிரிவு
- ஆதித்யா பிரதாப் யாதவ் - ஆண் - ஆண்கள் 65 கிலோ வெல்டர் வெயிட் எடை பிரிவு
டிராக் சைக்கிளிங்:
- டேவிட் பெக்காம் எல்காடோச்சாங்கோ - ஆண்
- ஜெம்ஷ் சிங் கெய்தெல்லாக்ரம் - ஆண்
- தினேஷ் குமார் - ஆண்
- ரொனால்டோ சிங் லைடோஞ்சம் - ஆண்
- ரோஜித் சிங் யாங்லெம் - ஆண்
- சேகான் ஹர்ஷ்வீர் சிங் - ஆண்
ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்:
- நிஷ்கா அகர்வால் - பெண்
- பிரணதி நாயக் - பெண்
- எஷிதா சுனில் ரேவாலே - பெண்
- பிரதிஸ்தா சமந்தா - பெண்
- தபன் மொஹந்தி - ஆண்
- தாஸ் தபேஸ்வரநாத் - ஆண்
- கைதேரி புத்தலத் ஸ்வாதிஷ் - ஆண்
- சத்யஜித் மொண்டல் - ஆண்
ஜூடோ:
- ஸ்ரத்தா கடுபால் சோபாடே - பெண் - பெண்கள் 52 கிலோ பிரிவு
- அஸ்மிதா டே - பெண் - பெண்கள் 48 கிலோ பிரிவு
- துலிகா மான் - பெண் - பெண்கள் 78+ கிலோ பிரிவு
- யாமினி மௌரியா - பெண் - பெண்கள் 57 கிலோ பிரிவு
- இஷ்ரூப் நரங் - பெண் - பெண்கள் 78 கிலோ பிரிவு
- உன்னதி சர்மா - பெண் - பெண்கள் 63 கிலோ பிரிவு
- இனுங்கன்பி தகெல்லாம்பம் - பெண் - பெண்கள் 70 கிலோ பிரிவு
- அவதார் சிங் - ஆண் - ஆண்கள் 100 கிலோ பிரிவு
- யாஷ் கங்காஸ் - ஆண் - ஆண்கள் 100+ கிலோ பிரிவு
- அருண் குமார் - ஆண் - ஆண்கள் 73 கிலோ பிரிவு
- கரன்ஜித் சிங் மான் - ஆண் - ஆண்கள் 90 கிலோ பிரிவு
- ரோஹித் பசிர் - ஆண் - ஆண்கள் 66 கிலோ பிரிவு
- ஹர்ஷ் சிங் - ஆண் - ஆண்கள் 60 கிலோ பிரிவு
- ஹர்ஷ் டோகாஸ் - ஆண் - ஆண்கள் 81 கிலோ பிரிவு
லான் பௌல்ஸ்:
- பிங்கி - பெண்
- நயன்மோனி சைகியா - பெண்
- ரூபா ராணி திர்கி - பெண்
- தினேஷ் குமார் - ஆண்
- நவநீத் சிங் - ஆண்
- புதுல் சோனோவால் - ஆண்
நீச்சல்:
- சஜன் பிரகாஷ் - ஆண்
- ஸ்ரீஹரி நடராஜ் - ஆண்
- ஆர்யன் நெஹ்ரா - ஆண்
- அனீஷ் சுனில் குமார் கவுடா - ஆண்
- தக்ஷன் சசிகுமார் - ஆண்
பழுதூக்குதல்:
- மீராபாய் சானு சைக்ஹோம் - பெண்
- சஞ்சனா - பெண்
- செராம் நிருபமா தேவி - பெண்
- ஹர்ஜிந்தர் கவுர் - பெண்
- மார்டினா தேவி மைபம் - பெண்
- பிந்தியாராணி தேவி சொரோகாய்பம் - பெண்
- ஞானேஸ்வரி யாதவ் - பெண்
- லவ்பிரீத் சிங் - ஆண்
- வலூரி அஜய் பாபு - ஆண்
- ரிஷிகாந்தா சிங் சனம்பம் - ஆண்
- ராஜா முத்துபாண்டி - ஆண்
- தில்பாக் சிங் - ஆண்
மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் (Para Athletics):
- ஷர்மிளா - பெண்
- ஷில்பா காஞ்சுகாரகொப்பலு ஷைலா - பெண்
- தேவேந்தர் குமார் - ஆண்
- ராகேஷ்பாய் பட் - ஆண்
- திலீப் மகாது காவித் - ஆண்
- சுபம் ஜூயல் - ஆண்
- முகமது பசில் மோர்சிங்கனகத் - ஆண்
- சோமன் ராணா - ஆண்
- ரமேஷ் சண்முகம் - ஆண்
- சாகர் தாயத் - ஆண்
- ஸ்ரேயான்ஷ் திரிவேதி - ஆண்
பெண்கள் 3x3 சக்கர நாற்காலி கூடைப்பந்து (3x3 Wheelchair Basketball):
- ரீனா ரமேஷ்சந்திர குப்தா - பெண்
- இரெங்பம் ரிது சானு - பெண்
- மீனாட்சி ஹரிச்சந்திர ஜாதவ் - பெண்
- லட்சுமி ராயப்பா ராயன்னவர் - பெண்
மாற்றுத்திறனாளிகளுக்கான பவர்லிஃப்டிங் (Para Powerlifting):
- ஜஸ்பிரீத் கவுர் - பெண்
- சுமன் தேவி - பெண்
- கஸ்தூரி ராஜாமணி - பெண்
- அசோக் - ஆண்
- பரம்ஜீத் குமார் - ஆண்
- சுதிர் - ஆண்
- ஜந்து குமார் - ஆண்
மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் (Para Swimming):
- ரவி வீரா வெங்கட புடிகினா - ஆண்
- அலி இமாம் - ஆண்
- சுயாஷ் நாராயண் ஜாதவ் - ஆண்
- சைதன்யா விஸ்வாஸ் குல்கர்னி - ஆண்
- தேஜஸ் நந்தகுமார் - ஆண்
- ஸ்வாதிக் பாட்டீல் - ஆண்
மாற்றுத்திறனாளிகளுக்கான டிராக் சைக்கிளிங் (Para Track Cycling):
- லிஷா தாஸ் - பெண்


Click it and Unblock the Notifications