Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.. ஆனால் 5வது இடம் மட்டுமே!

கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரர் நீரஜ் சோப்ரா 79.61 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற தகுதிச் சுற்றில் பலத்த காற்று மற்றும் கடினமான வானிலை காரணமாக வீரர்கள் அனைவரும் கடுமையாகத் தடுமாறினர். இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற 84.00 மீட்டர் தூரம் வீச வேண்டும் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தகுதிச் சுற்றில் பங்கேற்ற 18 வீரர்களில் ஒருவரால் கூட இந்த இலக்கை எட்ட முடியவில்லை.

Commonwealth Games 2026 Neeraj Chopra Rohit Yadav Yash Vir qualifies for Javelin Throw final in Glasgow

தனது முதல் முயற்சியில் 76.28 மீட்டர் வீசிய நீரஜ் சோப்ரா, இரண்டாவது முயற்சியில் 79.61 மீட்டர் தூரம் வீசி 5-வது இடத்தை மட்டுமே பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தான் தகுதி பெற்றுவிட்டதை உறுதி செய்ததை அடுத்து, தனது மூன்றாவது வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நீரஜ் சோப்ராவுடன் இணைந்து மற்ற இரண்டு இந்திய வீரர்களான ரோஹித் யாதவ் (78.37 மீட்டர் - 9-வது இடம்) மற்றும் யாஷ் வீர் சிங் (78.36 மீட்டர் - 10-வது இடம்) ஆகியோரும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளனர். இதனால் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 3 இந்திய வீரர்கள் பதக்கத்திற்காகப் போட்டியிட உள்ளனர்.

தகுதிச் சுற்றில் இலங்கையின் ரமேஷ் தரங்க பத்திரகே 82.84 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்தார். முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 81.29 மீட்டர் வீசி 2-வது இடமும், நடப்பு சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 78.63 மீட்டர் தூரம் வீசி 7-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர். அதே நேரத்தில், முன்னாள் உலக சாம்பியனான கென்யாவின் ஜூலியஸ் யெகோ 13-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து ஏமாற்றம் அளித்தார்.

“தயவுசெய்து இந்திய அணியை அனுப்புங்க.. எங்க நாடு ரொம்ப பாதுகாப்பானது”.. கெஞ்சும் வங்கதேசம்

“தயவுசெய்து இந்திய அணியை அனுப்புங்க.. எங்க நாடு ரொம்ப பாதுகாப்பானது”.. கெஞ்சும் வங்கதேசம்

கடந்த 2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் தொடரில் தங்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ரா, கடந்த 2022 பர்மிங்காம் தொடரில் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. இதனால் இந்த முறை மீண்டும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்ற அவர் தீவிரமாகப் போட்டியிட உள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12:45 மணிக்கு நடைபெறவுள்ளது.

“சொடக்கு சத்தம் கேட்டால் பேட்ஸ்மேன் அவுட்டு”.. கிளிக்கி பாண்டிங் விவகாரத்தில் வீரர் சஸ்பெண்ட்

“சொடக்கு சத்தம் கேட்டால் பேட்ஸ்மேன் அவுட்டு”.. கிளிக்கி பாண்டிங் விவகாரத்தில் வீரர் சஸ்பெண்ட்
Story first published: Thursday, July 30, 2026, 17:00 [IST]
Other articles published on Jul 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+