சறுக்கலுடன் ஆரம்பித்து சபாஷுடன் முடிவடைந்த டெல்லி காமன்வெல்த் போட்டி!

அக்டோபர் 3ம் தேதி 19வது காமன்வெல்த் போட்டி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. அடுத்த நாள் முதல் போட்டிகள் தொடங்கின. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு ஏகப்பட்ட சர்ச்சைகள், சண்டைகள். ஆனால் போட்டி ஆரம்பித்த பின்னர் அத்தனையும் அடிபட்டுப் போய் விட்டது.
11 நாட்களாக நடந்து வந்த போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து பிரமாண்ட நிறைவு விழா நடைபெறுகிறது.
தொடக்க விழா இந்தியாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலித்தது. நிறைவு விழாவில் நவீன இந்தியாவை உலகுக்கு வெளிப்படுத்த உள்ளனர்.
இசை, பாடல், நடனம் என கலக்கலான விழாவாக இது அமையவுள்ளது. சக்தே இந்தியா பாடல், மனதை வருடும் சுபி பாடல்கள், கிளாசிகல் பாடல்கள், ஸ்காட்லாந்தின் பாரம்பரிய பேக்பைப்பர் இசை என ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் இசை விருந்தை அளிக்கவுள்ளது.
2010 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் 50 நிமிட வந்தே மாதரம் நிகழ்ச்சி உச்சகட்ட நிகழ்ச்சியாக அமையவுல்ளது.
அடுத்த போட்டி ஸ்காட்லாந்தில் நடைபெறவுள்ளதால் நிறைவுப் பகுதியில் அந்த நாட்டு கலை நிகழ்சசிகள் இடம்பெறுகிறது. இதில் முக்கியமானது 400 பேக்பைப்பர் கலைஞர்கள் கலந்து கொண்டு வழங்கவுள்ள இசை நிகழ்ச்சி. 2014ல் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிக்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் இது அமையும்.
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மணிப்பூர், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 800 கலைஞர்கள் இணைந்து இந்திய தற்காப்புக் கலை நிகழ்ச்சி ஒன்றை வழங்கவுள்ளனர். இதற்கு அக்னி என்று பெயரிடப்பட்டுள்ளது.
சுனிதி செளஹான், சங்கர் மகாதேவன் ஆகியோர் நிகழ்ச்சியில் பாடவுள்ளனர்.
கண்ணைக் கவரும் லேசர் காட்சி உள்ளிட்டவையும் காத்துள்ளன. லேசர் காட்சிக்கான சாதனங்களை ஐரோப்பாவிலிருந்து வரவழைத்துள்ளனர்.
வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழா அனைவரின் மனதையும் விட்டு நீண்ட காலம் அகலா வண்ணம் அற்புதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications