காமன்வெல்த் 2026.. ஜூலை 28 அன்று இந்திய வீரர்கள் ஆடப் போகும் போட்டிகள் அட்டவணை.. பதக்க வாய்ப்பு
கிளாஸ்கோ: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 6வது நாளான இன்று (ஜூலை 28), பளுதூக்குதல், தடகளம், குத்துச்சண்டை மற்றும் நீச்சல் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றனர். ஜூலை 28 அன்று, 2026 காமன்வெல்த் தொடரின் ஆறாவது நாளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளின் முழு விவரங்கள் -

தடகளம் மற்றும் பாரா தடகளம்:
-
மாலை 4:30 - ஆண்கள் 400 மீட்டர் சுற்று 1 - ராஜேஷ் ரமேஷ் (ஹீட் 3), விஷால் டி.கே (ஹீட் 6)
-
இரவு 11:35 - பெண்கள் உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று) - பூஜா
-
நள்ளிரவு 12:55 (ஜூலை 29) - ஆண்கள் 10,000 மீட்டர் இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று) - குல்வீர் சிங்
குத்துச்சண்டை:
-
இரவு 10:30 - பெண்கள் 54 கிலோ காலிறுதி - பிரீத்தி பவார் X நிகோல் கிளைட் (வட அயர்லாந்து)
-
இரவு 11:00 - பெண்கள் 60 கிலோ காலிறுதி - பிரியா கங்காஸ் X நியம் மிட்செல் (ஸ்காட்லாந்து)
-
இரவு 11:30 - பெண்கள் 65 கிலோ காலிறுதி - பர்வீன் ஹூடா X சாச்சா ஹிக்கி (இங்கிலாந்து)
-
நள்ளிரவு 12:15 (ஜூலை 29) - ஆண்கள் 55 கிலோ காலிறுதி - ஜாடுமணி சிங் X முவெங்கோ முவாலே (சாம்பியா)
-
நள்ளிரவு 1:30 (ஜூலை 29) - ஆண்கள் 90 கிலோ காலிறுதி - கபில் பொகாரியா X ராபர்ட் மெக்னல்டி (ஸ்காட்லாந்து)
நீச்சல் மற்றும் பாரா நீச்சல்:
-
பிற்பகல் 3:26 முதல் - ஆண்கள் 50 மீட்டர் பட்டர்பிளை ஹீட்ஸ் - சாஜன் பிரகாஷ் (ஹீட் 9)
-
மாலை 4:41 முதல் - ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸ் - ஸ்ரீஹரி நடராஜ் (ஹீட் 4)
-
மாலை 4:57 முதல் - ஆண்கள் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்13 ஹீட்ஸ் - ஆர்.வி.வி.பி.கே. புடிகினா (ஹீட் 1), அலி இமாம் (ஹீட் 2)
-
இரவு 11:57 - ஆண்கள் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்13 இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று - தகுதி பெற்றால்) - ஆர்.வி.வி.பி.கே. புடிகினா, அலி இமாம்
-
நள்ளிரவு 12:50 (ஜூலை 29) - ஆண்கள் 50 மீட்டர் பட்டர்பிளை அரையிறுதி (தகுதி பெற்றால்) - சாஜன் பிரகாஷ்
-
நள்ளிரவு 1:33 (ஜூலை 29) - ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் அரையிறுதி (தகுதி பெற்றால்) - ஸ்ரீஹரி நடராஜ்
பளுதூக்குதல்:
-
மாலை 6:30 - பெண்கள் 63 கிலோ இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று) - நிருபமா தேவி சேரம்
-
நள்ளிரவு 1:07 (ஜூலை 29) - பெண்கள் 69 கிலோ இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று) - ஹர்ஜிந்தர் கவுர்
பவுல்ஸ் மற்றும் பாரா பவுல்ஸ்:
-
இரவு 10:20 - ஆண்கள் இரட்டையர் பிரிவு - பிரிவு பி, சுற்று 1 - இந்தியா (நவ்நீத் சிங், தினேஷ் குமார்) X குக் தீவுகள் (எபி பொய்லா, ஜேசன் லிண்ட்சே)
-
நள்ளிரவு 1:10 (ஜூலை 29) - பெண்கள் தனிநபர் பிரிவு - பிரிவு சி, சுற்று 1 - நயன்மோனி சைகியா X ஆமி வில்லியம்ஸ் (வேல்ஸ்)


Click it and Unblock the Notifications

