10 மீ ஏர் ரைபிள்-அபினவ் பிந்த்ராவை வீழ்த்தி தங்கம் வென்றார் ககன் நரங்

10 மீட்டர் ஏர் ரைபிள் ஜோடிப் பிரிவில் பிந்த்ராவுடன் இணைந்து தங்கம் வென்றிருந்தார் நரங். இந்த நிலையில், இன்று நடந்த போட்டியில் இருவரும் எதிரும் புதிருமாக மோதினர். இதில் முழுமையாக 600 புள்ளிகளையம் பெற்று முதலிடத்தைப் பிடித்தார் நரங். இது புதிய காமன்வெல்த் சாதனையும் கூட.
அபினவ் பிந்த்ரா 595 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதுவரை 9 தங்கப் பதக்கம்:
தற்போது இந்தியா 18 பதக்கங்களுடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது. இதில் தங்கம் மட்டும் 9 ஆகும். இவை தவிர 7 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications