டெல்லி: காமன்வெல்த் போட்டியில் இன்று இந்தியாவுக்குமேலும் ஒரு தங்கம் கிடைத்தது. துப்பாக்கிச் சுடுதலில் குர்மீத் சிங், விஜய்குமார் ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
இன்று காலை நடந்த 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் ஜோடிப் பிரிவில் குர்மீத் சிங், விஜய்குமார் ஜோடி இந்த தங்கத்தை வென்றது.
இதையும் சேர்த்து இந்தியா இதுவரை 12 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 6 பதக்கங்கள் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மட்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.