Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் போட்டி-துப்பாக்கிச் சுடுதலில் 2 தங்கம் வென்றது இந்தியா

Bindra and Gagan Narang
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் இன்று இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

இரண்டுமே துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் கிடைத்துள்ளது.

முதல் பதக்கத்தை இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்களான அபினவ் பிந்த்ரா மற்றும் ககன் நரங் ஜோடி வென்றது.

ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில் பிந்த்ராவும், நரங்கும் 1193 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து தங்கத்தை தட்டிப் பிடித்தனர்.

டெல்லி காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2006 மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 1189 புள்ளிகளைப் பெற்றிருந்தது. அதையும் இன்று பிந்த்ரா, நரங் ஜோடி முறியடித்து புதிய சாதனை படைத்தது.

பிந்த்ரா பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர். நரங் உலக சாதனை படைத்தவர். இவர்கள் மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நரங் 99, 100, 100, 99, 100, 100 என மொத்தம் 598 புள்ளிகளைப் பெற்றார். பிந்த்ரா, 100, 98, 99, 100, 99, 99 என 595 புள்ளிகளைப் பெற்றார்.

இங்கிலாந்து ஜோடியான ஜேம்ஸ் ஹக்கிள், கென்னி பார் 2வது இடத்தையும், வங்கதேசத்தின் அப்துல்லா ஹெல் பாக்கி, முகம்மது ஆசிப் ஹூசேன் கான் 3வது இடத்தையும் பிடித்தனர்.

25 மீட்டர் பிரிவில் இன்னொரு தங்கம்:

இதேபோல 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரஹீசர்நாடத் மற்றும் அனிஷா சயீத் ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அத்தோடு நில்லாமல் புதிய காமன்வெல்த் போட்டி சாதனையையும் இந்த ஜோடி படைத்தது.

முதல் நாளில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் கிடைத்தன. ஆனால் தங்கம் கிடைக்கவில்லை. ஆனால் 2வது நாளில் 2 தங்கம் பெற்று தற்போது பதக்கப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.

இன்று நடைபெறும் பிற போட்டிகளில் தேஜஸ்வினி சாவந்த், லஜ்ஜா கோஸ்வாமி ஆகியோரும் தங்கத்தைக் குறி வைத்து சுடவுள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+