For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த் போட்டி-இன்று மேலும் 4 தங்கப் பதக்கங்களை அள்ளியது இந்தியா

டெல்லி: காமன்வெல்த் போட்டியில் இன்று இந்தியா மேலும் 4 தங்கப் பதக்கங்களை வென்றது.

பெண்களுக்கான வில்வித்தைக் குழுப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, டோலா பானர்ஜி, பாம்பயா தேவி ஆகியோர் இங்கிலாந்தை 207-206 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

அதேபோல ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் ஜோடிப் பிரிவில் இந்தியாவின் ககன் நரங், இம்ரான் ஹசன் ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. புதிய காமன்வெல்த் சாதனையையும் இந்த ஜோடி படைத்தது.

விஜய்க்குமாருக்கு தங்கம்

துப்பாக்கி் சுடுதலில் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் விஜயக்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

அல்கா டோமருக்கு தங்கம்

பெண்களுக்கான 50 கிலோ ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்தியாவின் அல்கா டோமர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். கனடாவுக்கு வெள்ளி கிடைத்தது.

51 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் பபிதா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஆசிஷ் குமாருக்கு வெள்ளி

ஜிம்னாஸ்டிக்ஸில் ஆடவர் வால்ட் பிரிவில் இந்தியாவின் ஆசிஷ் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

துப்பாக்கிச் சுடுதலில் டிராப் பிரிவில் இந்தியாவின் மனவ்ஜித் சிங் சந்து, மான்ஷெர் சிங் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

இந்திய ஆடவர் அணி வில்வித்தைப் போட்டியில் இங்கிலாந்தை வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

இறுதிப் போட்டிக்கு சோம்தேவ்-சானியா தகுதி:

டென்னிஸ் போட்டிகளில் இன்று இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மனும், சானியா மிர்ஸாவும் தத்தமது அரை இறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

சோம்தேவ் தனது இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் கிரேக் ஜோன்ஸை சந்திக்கிறார்.

சானியா தனது அரை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஒலிவியா ரோகவ்ஸ்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்றைய போட்டியை சானியாவின் கணவரான பாகிஸ்தானின் சோயப் மாலிக் அமர்ந்து பார்த்து ரசித்தார்.

இரட்டையர் பிரிவில் சோம்தேவ் தோல்வி:

அதேசமயம், ஆடவர் இரட்டையர் போட்டியின் அரை இறுதியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன்-போபன்னா ஜோடி அவுட் ஆகி வெளியேறியது.

தற்போது இந்தியா 18 தங்கப் பதக்கங்கள், 13 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 42 பதக்கங்களுடன் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி 41 தங்கம், 21 வெள்ளி, 20 வெண்கலத்துடன் 82 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+