Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் போட்டி-1 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது இந்தியா

Soniya Chanu
டெல்லி: காமன்வெல்த் போட்டியின் பதக்க வேட்டையை இன்று இந்தியா தொடங்கியது. முதல் நாளிலேயே 2 பதக்கங்களை அது வென்றது. இரண்டுமே பளு தூக்கும் போட்டியின் மூலம் கிடைத்தன.

இரண்டு பதக்கங்களையும் இந்திய பளு தூக்கும் வீராங்கனைகள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சோனியா சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் மொத்தம் 167 கிலோ எடையைத் தூக்கினார். இப்போட்டியில் நைஜீரிய வீராங்கனை ஆகஸ்டினா நவகோலா 175 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். இது புதிய காமன்வெல்த் போட்டி சாதனையாகும்.

இப்பிரிவில் 165 கிலோ எடையைத் தூக்கிய இந்தியாவின் சந்தியா ராணி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இப்போட்டியின் ஸ்னாட்ச் பிரிவில் சானுவும், ஆகஸ்டினாவும் தலா 94 கிலோ எடையுடன் சம நிலையில் இருந்தனர். ஆனால் பின்னர் க்ளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் நைஜீரிய வீராங்கனை கூடுதல் எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்து விட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+