ஊக்க மருந்து சோதனையில் சிக்கியவர் இந்தியாவின் ராணி யாதவ்

முன்னதாக இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர் குறித்த முடிவு கிடைத்துள்ளது. அதில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்தியக் குழுத் தலைவருக்கும் தெரிவித்துள்ளோம்.
யார் சிக்கியுள்ளது என்பதை இப்போது தெரிவிக்க முடியாது. விதிமுறைப்ப்படி சம்பந்தப்பட்ட வீரர் அல்லது வீராங்கனைக்கு நோட்டீஸ் போய்ச் சேர்ந்த பின்னர்தான் அதை வெளிப்படையாக அறிவிக்க முடியும். தற்போதைய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் நோட்டீஸை பெற்று விட்டாரா என்பது தெரியவில்லை.
இருப்பினும் அவர் இந்தியர், தடகளப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் என்னால் தெரிவிக்க முடியும் என்றார் பென்னல்.
இந்த நிலையில் அது ராணி யாதவ், 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் கலந்து கொண்டு 6வது இடத்தைப் பிடித்தவர் என்பது தெரிய வந்துள்ளது. தடை செய்யப்பட்ட நான்ட்ரோலின் ஊக்க மருந்தை அவர் உட்கொண்டதும் சோதனையில் தெரிய வந்துள்ளது.
டெல்லி காமன்வெல்த் போட்டியில் இதுவரை நைஜீரியாவைச் சேர்ந்த 110 மீட்டர் தடகள வீரர் சாமுவேல் ஓகான், 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற நைஜீரிய வீராங்கனை ஓசயேமி ஒலுடமோலா ஆகியோர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். தற்போது இந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காமன்வெல்த் போட்டிக் குழு செயலாளர் அதிர்ச்சி:
ராணி யாதவ் டோப் டெஸ்ட்டில் தோல்வியுற்றிருப்பது குறித்து காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழு செயலாளர் லலித் பானட் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் அதிர்ச்சிகரமானது, துரதிர்ஷ்டவசமானது. இந்த செயல்மிகவும் கடுமையானது. தற்போது பெரும் இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது. போட்டியை நடத்தும் நாமே இப்படி நடந்து கொண்டிருப்பது வருத்தம் தருகிறது. இதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றார் பானட்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications