Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தொடக்க விழாவுக்கு டயானா வந்தாராம்-அப்துல் கலாம் ஆசாத்தாம்'-உளறலின் உச்சத்துக்குப் போன கல்மாடி!!

Kalmadi with Minister Ambika Soni
டெல்லி: உளறலின் உச்சிக்கே நேற்று போய் விட்டார் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடி. காமன்வெல்த் போட்டி தொடக்க விழாவுக்கு இளவரசி டயானா வந்தார் என்று அவர் கூறியபோதும், அபுல் கலாம் ஆசாத் என்று கூறுவதற்குப் பதிலாக அப்துல் கலாம் ஆசாத் என்று கூறியதும் பெரும் கேலிப்பொருளாக்கி விட்டது கல்மாடியை.

இதுவரை செய்த குழப்பங்களுக்காக குண்டக்க மண்டக்க கல்மாடியின் தலையை உருட்டிவரும் நிலையில் நேற்று உளறலின் உச்சத்திற்கேப் போய் விட்டார் கல்மாடி.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கல்மாடி. அப்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், தொடக்க விழாவின்போது தாங்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும், ஆடு மாடுகளைப் போல தங்களை நடத்தியதாகவும் குமுறினர். இதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார் கல்மாடி.

அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது மிகவும் பதட்டமாகி தப்புத் தப்பாக பேசினார்.

அவர் கூறியதில் ஒன்று - தொடக்க விழாவுக்கு வருகை தந்தமைக்காக இளவரசி டயானாவுக்கு எனது நன்றிகள் (டயானா 1997லிலேயே இறந்து போய் விட்டார். இளவரசர் சார்லஸுடன் வந்த அவரது 2வது மனைவி கமீலாவைத்தான் டயானா என்று கூறினார் கல்மாடி.)

அடுத்து, அபுல் கலாம் ஆசாத் என்ற பெயரை மாற்றி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் சேர்த்து அப்துல் கலாம் ஆசாத் என்று அவர் கூறியபோது இந்திய மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் சிரித்துக் கொண்டனர்.

அத்தோடுநிற்கவில்லை கல்மாடி. டிக்கெட்கள் அனைத்தும் விற்பனையாகி விட்டன. பார்வையாளர்கள் டிக்கெட்டுக்காக நீண்ட கியூ வரிசையில் காத்துள்ளனர் என்றார்.அப்போதும் மீடியாக்காரரர்கள் சிரித்துக் கொண்டனர். காரணம், எந்த ஸ்டேடியும் இதுவரை ஒருமுறை கூட நிரம்பவில்லை. மேலும் டிக்கெட்களும் பெருமளவில் கவுண்டர்களில் குவிந்து கிடக்கின்றன. வாங்க யாராவது வருவார்களா என்று டிக்கெட் கவுண்டர்களில் உட்கார்ந்திருப்போர் கொட்டாவி விட்டபடி உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

கல்மாடி பேசாமல் கொஞ்ச நாளைக்கு மெளன விரதம் இருந்தாலும், அவருக்கும், நாட்டுக்கும், போட்டிக்கும் ரொம்ப புண்ணியமாகப் போகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+