ஜெய்ப்பூர்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், ஷேவாக், திணேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடி பெரும் ரன்களை குவிக்கவிருந்த நிலையில் அரை சதத்தை தொட்டபோது அவுட் ஆகினர்.
தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சால் இந்திய முன்னணி வீரர்கள் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் வீழ்ந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா இந்தியாவை பேட் செய்யப் பணித்தது.
இதையடுத்து ஆடத் தொடங்கியது இந்தியா. எடுத்த எடுப்பில் 4 ரன்களே சேர்த்த நிலையில் சச்சின் வீழ்ந்தார்.
இருப்பினும் ஷேவாக்கும், திணேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆட ஆரம்பித்தனர். இதனால் இந்தியா பெரிய ஸ்கோரை எட்டும் என்ற நம்பிக்கை வந்தது.
ஆனால் ஷேவாக், 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து திணேஷ் கார்த்திக் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கேப்டன் டோணியும் 26 ரன்களில் வெளியேற அணி தடுமாறியது. விராத் கோலி 31 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இதையடுத்து சுரேஷ் ரெய்னாவும், யூசுப் பதானும் சேர்ந்தனர். 39வது ஓவரின் முடிவில் ரெய்னா 47 ரன்களுடனும், பதான் 12 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.
இப்போட்டியில் கேப்டன் ஸ்மித் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் கல்லிஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அதேபோல இந்திய அணியில் கம்பீர், ஜாகிர்கான், யுவராஜ் சிங் உள்ளிட்டோர் இல்லை.