Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா சாமி முடியலை.. 4 வருசத்துல இது மூணாவது.. இவருக்கு வேற வேலையே இல்லையா? கடுப்பேற்றிய மெக்ரிகோர்!

நியூயார்க் : பிரபல மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் கோனோர் மெக்ரிகோர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலகின் நம்பர் 1 கலப்பு தற்காப்புக் கலை வீரராக விளங்கும் கோனோர் மெக்ரிகோர் ஓய்வு அறிவிப்பு வெளியிடுகிறார் என்றால் பரபரப்பு எழ வேண்டும்.

மாறாக "அடப்போங்கப்பா" என்கிற ரீதியில் தான் ரசிகர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மூன்றாவது முறை

மூன்றாவது முறை

அதற்கு காரணம் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கோனோர் மெக்ரிகோர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு முறையும் சில நாட்கள் அல்லது மாதங்களில் ஓய்வில் இருந்து மீண்டும் களத்துக்கு வந்து விட்டார்.

முன்னணி வீரர்

முன்னணி வீரர்

அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்ஷிப் (யூ.எஃப்.சி) எனப்படும் கலப்பு தற்காப்புக் கலை நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமானது. அதில் முன்னணி வீரராக திகழ்கிறார் கோனோர் மெக்ரிகோர். அதன் மூலம் பெரும் பணமும் சம்பாதித்துள்ளார்.

பணக்கார விளையாட்டு வீரர்

பணக்கார விளையாட்டு வீரர்

சமீபத்தில் வெளியான போர்ப்ஸ் பத்திரிக்கையின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கூட முதல் பத்து இடங்களில் இடம் பெற்று இருந்தார். அவர் ஆண்டுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் தான் ஆடுகிறார். அதற்கே பணம் கொட்டுகிறது.

இளம் வீரராக ஓய்வு

இளம் வீரராக ஓய்வு

இந்த நிலையில், அவர் ஓய்வு பெறுவார் என்பதை அத்தனை எளிதில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன் கேரியரின் உச்சத்தில் இருந்த போது தான் இளம் வீரராக ஓய்வு பெறப் போகிறேன் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.

அதிர்வலை

அதிர்வலை

அப்போது அது உண்மை என கருதப்பட்டது. தற்காப்புக் கலை அரங்கில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும், அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றார். அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.

40 வினாடிகளில் வெற்றி

40 வினாடிகளில் வெற்றி

பின்னர், சில மாதங்கள் கழித்து மீண்டும் யூ.எஃப்.சி போட்டிக்கு தயார் ஆவதாக செய்திகள் வந்தது. கடந்த ஜனவரியில் அவர் போட்டியில் பங்கேற்று 40 வினாடிகளில் வெற்றி பெற்று அசர வைத்தார். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு கிச்சுகிச்சு மூட்டி உள்ளார்.

ரசிகர்கள் அதகளம்

ரசிகர்கள் அதகளம்

ஆனால், இதுவும் பொய்யாகவே இருக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். அவரை செமயாக கலாய்த்து ட்விட்டரில் பலரும் அதகளம் செய்து வருகிறார்கள். அவர் பெறும் வெற்றிகளின் எண்ணிகையை விட ஓய்வு அறிவிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

Story first published: Sunday, June 7, 2020, 16:28 [IST]
Other articles published on Jun 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+