For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

32 வயது சூரன்.. சூப்பர் ஸ்டார்ஸ்களே 'கப்சிப்'.. உலகில் அதிக சம்பளம் - Forbes லிஸ்ட்

அமெரிக்கா: உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் அடங்கிய பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்பஸ் (Forbes) அமெரிக்க வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் யார் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

விளையாட்டு ஊதியம், விளம்பரம், சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கி இந்த லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, 'Forbes' எனும் பிராண்டில் தங்கள் பெயர் வருவதையே விளையாட்டு வீரர்கள் பெருமையாக எண்ணுவார்கள்.

 106.3 மில்லியன் டாலர்

106.3 மில்லியன் டாலர்

கடந்த ஆண்டு உலகின் டாப் பணக்கார விளையாட்டு வீரராக சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் 106.3 மில்லியன் டாலர் வருமானத்துடன் முதலிடம் பிடித்திருந்தார். அதேபோல், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 105 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாமிடமும், லயோனல் மெஸ்ஸி 104 மில்லியன் டாலர் வருமானத்துடன் மூன்றாமிடமும் பிடித்தனர்.

 ஒரே கிரிக்கெட் வீரர்

ஒரே கிரிக்கெட் வீரர்

அந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்திருந்தார் . இதன்மூலம் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். குறிப்பாக, 2019ம் ஆண்டு பட்டியலில் விராட் கோலி 100வது இடத்தில் இருந்த நிலையில் கடந்தாண்டு 66 இடத்திற்கு முன்னேறினார்.

 180 மில்லியன் டாலர்

180 மில்லியன் டாலர்

இந்த நிலையில், 2021 ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர் விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி கலப்பு தற்காப்பு கலை வீரர் Conor McGregor 180 மில்லியன் டாலர் வருமானத்துடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். கடந்தாண்டு டாப் லிஸ்டில் இருந்த ரொனால்டோ, மெஸ்ஸி, ஃபெடரர் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி, முதன் முதலாக முதலிடம் பிடித்திருக்கிறார் இந்த 32 வயதே ஆன தற்காப்பு 'கலைப்புலி'. தனது துறையில் இவர் சம்பாதிக்கும் தொகை 22மில்லியன் மட்டுமே. இதர 158 மில்லியன் டாலர் விளம்பரம் மற்றும் இன்னபிற நிகழ்வுகளில் இருந்து பெறுகிறார்.

 ரொனால்டோ டவுன்

ரொனால்டோ டவுன்

இராண்டாம் இடத்தை பிடிப்பது லயோனல் மெஸ்ஸி. வருமானம் 130 மில்லியன் டாலர். சரியாக McGregor-ஐ விட 50 மில்லியன் டாலர் குறைவு. ஏணி வைத்தால் கூட உயரம் எட்டாது போல. மூன்றாம் இடத்தில் கிறிஸ்டியானால் ரொனால்டோ இருக்கிறார். இவரது வருமானம் 120 மில்லியன் டாலர். நான்காவது இடத்தில் 'அமெரிக்கன் ஃபுட்பால்' வீரர் டேக் பிரஸ்கோட் இருக்கிறார். இவரது வருமானம் 107.5 மில்லியன் டாலர். ஐந்தாவது இடத்தில் உள்ள அமெரிக்கன் பேஸ்கெட் பால் வீரர் லெப்ரான் ஜேம்ஸ் வருமானம் 96.5 மில்லியன் டாலர்.

 டாப் 10 லிஸ்ட்

டாப் 10 லிஸ்ட்

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 95 மில்லியன் டாலருடன் ஆறாவது இடத்திலும், ரோஜர் ஃபெடரர் 90 மில்லியன் டாலருடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர். ஃபார்முலா 1 ரேஸ் வீரர் லெவிஸ் ஹாமில்டன் 82 மில்லியன் டாலருடன் எட்டாவது இடத்திலும், அமெரிக்கன் கால்பந்து வீரர் டாம் பிராடி 76 மில்லியன் டாலருடன் ஒன்பதாவது இடத்திலும், கூடைப்பந்து வீரர் கெவின் டுரன்ட் 75 மில்லியன் டாலருடன் 10வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Thursday, May 13, 2021, 18:37 [IST]
Other articles published on May 13, 2021
English summary
Conor McGregor Beat Messi Forbes - பணக்கார விளையாட்டு வீரர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+