Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பலியான சமையல்காரருக்கு கொரோனா வைரஸ்.. கூட்டத்தில் கலந்து கொண்டாரா? பீதியில் வீரர்கள்!

பெங்களூரு : ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் பெங்களூரு மையத்தை சேர்ந்த சமையல்காரர் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு பலியானார்.
அவருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
அவர் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நடத்திய கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கலந்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த மையத்தில் இருக்கும் வீரர்கள், ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Recommended Video

பலியான சமையல்காரருக்கு கொரோனா கூட்டத்தில் கலந்து கொண்டாரா?
மரணம்

மரணம்

கடந்த மே 18ஆம் தேதி ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் பெங்களூரு மையத்தில் சமையல்காரராக இருந்த ஒருவர் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவர் கொரோனா வைரஸ் இருக்கிறதா என அறிய பரிசோதனைக்கு இரத்த மாதிரி கொடுத்து இருந்தார்.

தொற்று உறுதி

தொற்று உறுதி

அவரது பரிசோதனை முடிவுகள் மே 19 அன்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்று வந்த இடங்கள் குறித்து விசாரணை செய்த போது அவர் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.

2 மாதமாக பணியில் இல்லை

2 மாதமாக பணியில் இல்லை

கடந்த இரண்டு மாதமாக பெங்களூருவில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா கட்டிடத்தில் சமையல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அந்த சமையல்காரரும் கடந்த இரண்டு மாதமாக பணியில் இல்லை என கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடந்த கூட்டம்

வெள்ளிக்கிழமை நடந்த கூட்டம்

வீட்டில் இருந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் பெங்களூரு மையத்தில் விரைவில் சமையல் பணிகளை துவக்குவது குறித்து பேசப்பட்டுள்ளது.

மருத்துவமனை சென்றார்

மருத்துவமனை சென்றார்

அதன் பின் அந்த சமையல்காரர் தன் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்திருந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அதன் பின்னரே கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆகி உள்ளது.

 இடம் மாற்றம் இல்லை

இடம் மாற்றம் இல்லை

அவர் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் கிடைத்தாலும் அங்கே தங்கி உள்ள வீரர்களை இடம் மாற்றம் செய்யப் போவதில்லை என கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் 16 பேர் பங்கேற்றதாகவும், அதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதாகவும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் சங்க தலைவர் என்ன சொன்னார்?

ஒலிம்பிக் சங்க தலைவர் என்ன சொன்னார்?

அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் நால்வர் அதே கட்டிடத்தில் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரேந்தர் பத்ரா இந்த சம்பவம் குறித்து கருத்து கூறி உள்ளார். அவர் பீதியடைய அவசியமில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பின்பற்றப்பட்டுள்ளது. அந்த சமையல்காரருடன் பலரும் தொடர்பு கொண்டதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என கூறி உள்ளார்.

தனிமையில் வீரர்கள்

தனிமையில் வீரர்கள்

ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா கட்டிடம் மூன்றாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக அதில் ஒரு பகுதியில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் யாரும் அந்த சமையல்காரருடன் நேரடி தொடர்பு கொள்ளவில்லை என்றும் விளக்கம் கூறப்படுகிறது.

Story first published: Thursday, May 21, 2020, 15:02 [IST]
Other articles published on May 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+