Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இத்தாலி கால்பந்து வீரரை கடித்த உருகுவே வீரருக்கு ரூ.50 லட்சம் அபராதம், 4 மாதம் சஸ்பெண்ட்!!

ரியோடி ஜெனிரோ: இத்தாலி வீரர் தோள்பட்டையை கடித்து காயப்படுத்திய உருகுவே கால்பந்தாட்ட வீரர் லூயிஸ் சுவாரஸ் உலக கோப்பை தொடரில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன் அவருக்கு, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து பிபா உத்தரவிட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில், செவ்வாய்க்கிழமை, இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் மோதின. இதில் உருகுவே 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

கோல் அடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாக, இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, உயரமாக வந்த பந்தை தலையால் முட்டி தள்ளுவதற்காக உருகுவேயின் லூயிஸ் சுவாரசும், இத்தாலியின் ஜியார்ஜியோ செய்லினியும் குதித்தனர்.

தோளில்ல கடி

தோளில்ல கடி

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுவாரஸ், செய்லினியின் தோளில் பலமாக கடித்தார். வலியால் துடித்த செய்லினிக்கு தோளில் காயம் ஏற்பட்டது.

இதை நடுவர் ரோட்ரிகஸ்சிடம் காட்டியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிபா தலையீடு

பிபா தலையீடு

இந்நிலையில், இந்த விவகாரத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கையில் எடுத்தது. பிபா ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்தனர். சுவாரஸ் கடித்தது நிரூபணமாகும் பட்சத்தில் அவருக்கு 24 போட்டியில் விளையாட தடை அல்லது 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

உலக கோப்பையில் இருந்து அவுட்

உலக கோப்பையில் இருந்து அவுட்

இந்நிலையில், அவரை உடனடியாக உலக கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றுவதுடன் உருகுவே விளையாடும் அடுத்த 9 போட்டிகளில் சுவாரஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நான்கு மாதங்களுக்கு சுவாரஸ் அனைத்து வகையான கால்பந்து போட்டிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளதாகவும் பிபா அறிவித்துள்ளது.

ஐம்பது லட்சம் அபராதம்

ஐம்பது லட்சம் அபராதம்

தடைகளை தவிர, கடிக்கு அபராதமாக, 82,190 அமெரிக்க டாலர்கள் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் இது சுமார் ரூ.50 லட்சமாகும். உலகின் திறமையான கால்பந்தாட்டக்காரர்களில் சுவாரஸும் ஒருவர். அவர் இல்லாமல் அடுத்த சுற்றில் உருகுவே களம் காண உள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஒரு கடி இவ்வளவு காஸ்ட்லியாக மாறும் என்று பாவம் சுவராஸ் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தடை புதிதில்லை..

தடை புதிதில்லை..

இதற்கு முன், கடந்தாண்டு பிரீமியர் லீக் போட்டியில் லிவர்ஃபூல் அணிக்காக விளையாடிய சுவாரஸ், செல்சியாவின் இவானோவிக்கின் கையில் கடித்தார். இதற்காக 10 போட்டியில் விளையாட தடை பெற்றார்.

பல தடைகளை பார்த்தவர்..

பல தடைகளை பார்த்தவர்..

2010ல் அஜாக்ஸ் அணி கேப்டனாக இருந்த போது, பிஎஸ்வி என்தோவென்ஸ் அணியின் பக்கலின், தோளை கடித்து வைத்தார். இதற்காக 7 போட்டியில் தடை பெற்றார். 2011ல் மான்செஸ்டர் அணியின் பாட்ரைஸ் எர்ராவை கடித்ததற்காக 8 போட்டியில் தடை மற்றும் 40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 27, 2014, 10:55 [IST]
Other articles published on Jun 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+