Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாட்டு தின விருதுகள்... இறுதிப்பட்டியல் தயாராகவில்லை.. ரத்து செய்யப்பட வாய்ப்பு

டெல்லி: தேசிய விளையாட்டு தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 29ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா காரணமாகவும், இன்னும் இறுதிப்பட்டியல் தயார் செய்யப்படாத காரணத்தாலும் இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட அல்லது ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் விளையாட்டு தின விருதுகள் ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா மற்றும் தயான்சந்த் என நான்கு பிரிவுகளில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 29ம் தேதி திட்டம்

ஆகஸ்ட் 29ம் தேதி திட்டம்

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி ராஷ்டிரபதி பவனில் விளையாட்டு தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் அந்த தினத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ரத்து அல்லது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள்

விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள்

ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா மற்றும் தயான்சந்த் என நான்கு பிரிவுகளில் ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த பிரிவுகளில் விருதுகளுக்காக 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விழாவை ஒத்திவைக்க யோசனை

விழாவை ஒத்திவைக்க யோசனை

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில் மத்திய அரசு மற்றும் குடியரசு மாளிகை இந்த விழாவை நடத்த இது சரியான நேரம் இல்லை என்பதால் விழாவை ரத்து அல்லது காலவரையின்றி ஒத்திவைக்க யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழாவை ஒத்திவைக்க காரணம்

விழாவை ஒத்திவைக்க காரணம்

இந்த விருதுகளுக்கு உரிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்களை அதற்கான 2 தேர்வுக்குழுவும் இறுதி செய்து பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜூவிற்கு அனுப்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவும் விழாவை ஒத்திவைக்க முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 30, 2020, 13:51 [IST]
Other articles published on Jul 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+