Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா

மெல்போர்ன்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கடந்த வாரத்தில் தன்னுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பியது.

கிரிக்கெட் தொடர்களை நடத்தாததால் பல கோடி ரூபாய் அளவிற்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக இதற்கு காரணம் கூறியுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

இந்நிலையில் வேலை இழப்பில் சிக்கி தவிக்கும் தன்னுடைய ஊழியர்களுக்கு சூப்பர் மார்க்கெட்டில் தற்காலிகமாக வேலை கிடைக்க பரிந்துரைத்துள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

போட்டிகளை நடத்த முடியாமல் தவிப்பு

போட்டிகளை நடத்த முடியாமல் தவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் ஏறக்குறைய அனைத்து போட்டித் தொடர்களும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிலும் அனைத்து தொடர்களும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோடிக்கணக்கில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிரடி

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிரடி

இதையடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து கடந்த வாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா உத்தரவிட்டுள்ளது. மிகவும் மோசமான மற்றும் நெருக்கடியான சூழலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கெவின் ராபர்ட்ஸ் கோரிக்கை

கெவின் ராபர்ட்ஸ் கோரிக்கை

இதனிடையே, வேலை இழந்து தவிக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஊழியர்களுக்கு தங்களது முக்கிய விளம்பரதாரரான வூல்வொர்த் சூப்பர்மார்க்கெட்டில் தற்காலிக வேலை வழங்குமாறு, அதன் சிஇஓவிற்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகவும், கெவின் ராபர்ட்ஸ் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கான மற்ற வேலை வாய்ப்புகள் குறித்தும் தான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கெவில் ராபர்ட்ஸ் விளக்கம்

கெவில் ராபர்ட்ஸ் விளக்கம்

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் தற்போது பணிபுரிந்துவரும் ஊழியர்கள் 20 சதவிகித ஊதியத்திற்கும் நிர்வாகிகள் 80 சதவிகித ஊதியத்திற்கும் வேலையை தொடர்ந்து வருவது குறித்து புகார்கள் கூறப்படும் நிலையில், அவரவர் வேலைகளுக்கு ஏற்பவே ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் கெவின் ராபர்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Story first published: Wednesday, April 22, 2020, 13:05 [IST]
Other articles published on Apr 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+