Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நான் தான் இங்க கிங்" 100 கோடி ஃபாலோயர்ஸ்.. புதிய சரித்திரம் படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

மும்பை: உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமூக வலைதள கணக்குகளை மொத்தமாக 100 கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்து உள்ளனர். சமீபத்தில் அவர் யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி இருந்தார். மிகச் சில நாட்களிலேயே 6 கோடி ரசிகர்கள் அவரது யூடியூப் சேனலை பின்தொடரத் துவங்கி உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 63.9 கோடி ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் அதிக மக்களால் பின் தொடரப்படும் ஒரே நபர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். மற்றொரு சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி 50 கோடி ரசிகர்கள் உள்ளனர். அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

cristiano ronaldo football

ஃபேஸ்புக்கில் ரொனால்டோவை 17 கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் ரொனால்டோவை 11.3 கோடி மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர் சமீபத்தில் துவங்கிய யூடியூப் பக்கத்தில் இதுவரை 6.05 கோடி மக்கள் பின் தொடர்ந்து உள்ளனர்.

அடுத்து ரோனால்டாவுக்கு சீன சமூக வலைதள செயலிகளான குவாய்ஷோ மற்றும் வெய்போ-வில் மொத்தமாக 1.7 கோடி ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 100 கோடி மக்கள் அவரை பல்வேறு சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த சாதனையை செய்த முதல் நபர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். எனினும், அனைத்து சமூக வலைதளங்களும் சேர்த்து இன்னும் 50 கோடி ரசிகர்களை எட்ட முடியவில்லை. அதே சமயம், உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ மிக விரைவாக 100 கோடி ரசிகர்களை எட்டிப் பிடித்து இருக்கிறார்.

சில நாட்கள் முன்பு துவக்கப்பட்ட அவரது யூடியூப் சேனல் பல்வேறு சாதனைகளை உடைத்தது குறிப்பிடத்தக்கது. 21 மணி நேரத்தில் அவரது யூடியூப் சேனலை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்தனர். இந்த சாதனையை செய்த முதல் நபர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். இன்னும் சில மாதங்களில் அவரை 10 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Friday, September 13, 2024, 8:15 [IST]
Other articles published on Sep 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+