காமன்வெல்த் போட்டி: 5வது நாளில் நல்ல லாபம் பார்த்த இந்திய வீரர், வீராங்கனைகள்!
கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகளின் 5வது நாளின்போது இந்தியாவுக்கு தொடர்ந்து நல்ல நளாக அமைந்தது. 5வது நாளில் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை வென்றது. 5வது இடத்திலும் தொடர்கிறது.
இந்தியா நேற்று வென்ற பதக்கங்களில் 2 துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் கிடைத்தது. 3 பதக்கங்களை பளு தூக்குவோர் பெற்றனர்.
நேற்றைய பதக்கங்களில் ஒரே ஒரு பதக்கம்தான் தங்கமாக அமைந்தது. அதை தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் பளு தூக்குதலில் பெற்றுக் கொடுத்தார். இந்தியா தற்போது மொத்தம் 22 பதக்கங்களுடன் உள்ளது.

மொத்தம் 5 பதக்கங்கள்
நேற்றைய போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றனர்.

ஒரே ஒரு தங்கம்
இதில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

தங்க மகன் சதீஷ் சிவலிங்கம்
தங்கப் பதக்கத்தை வென்றவர் சதீஷ் சிவலிங்கம். ஆடவர் பளு தூக்குதலில் 77 கிலோ பிரவில் தங்கம் வென்றார் சிவலிங்கம்.

2 வெள்ளி
மகளிர் துப்பாக்கிச் சுடுதல், டபுள் டிராப் பிரிவில் ஷிரேயாசி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல ஆடவர் பளு தூக்குதல் 77 கிலோ பிரிவில் ரவி கட்லு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2 வெண்கலம்
ஆடவர் துப்பாக்கிச் சுடுதல், டபுள் டிராப் பிரிவில் முகம்மது ஆசப் வெண்கலம் வென்றார். மகளிர் பளு தூக்குதல் 63 கிலோ பிரிவில் பூனம் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதுவரை 6 தங்கம்
இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களுடன் 5வது இடத்தில் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications