Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படியே கிளாஸ்கோவுக்கு வாங்க.. நம்மாளுங்க காமன்வெல்த்ல கலக்கப் போறதைப் பார்க்கலாம்!

டெல்லி: கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் இந்தியா எப்படிப்பட்ட வெற்றிகளைக் குவிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய தடகளக் கழகம் தனது 32 பேர் கொண்ட அணியை களம் இறக்குகிறது. இவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிளாஸ்கோ நகரில் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளன.

41 பேரிலிருந்து

41 பேரிலிருந்து

முதலில் 41 பேரின் பெயர்களை பரிசீலனையில் வைத்திருந்தது தடகளக் கழகம். ஆனால் பின்னர் தீவிரப் பரிசீலனைக்குப் பின்னர் அது 32 ஆக குறைக்கப்பட்டது.

17 பெண்கள்

17 பெண்கள்

இந்த 32 பேரில் 17 பேர் வீராங்கனைகள் ஆவர். 15 பேர் வீரர்கள். 12 பேர் பயிற்சியாளர்கள். 3 பேர் பிற ஊழியர்கள்.

தடகளப் போட்டிகள்

தடகளப் போட்டிகள்

காமன்வெல்த் போட்டியில் தடகளப் போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறும்.

சிறந்தவர்கள் தேர்வு

சிறந்தவர்கள் தேர்வு

சிறந்த வீரர்களை, பதக்கம் பெறும் வாய்ப்புள்ளவர்களைத் தேர்வு செய்துள்ளதாகவும், அனுபவம் மற்றும் இளமைத் துடிப்புடன் கூடியவர்களைத் தேர்வு செய்துள்ளதாகவும் தடகளக் கழகம் தெரிவித்துள்ளது.

டெல்லியைப் போல வருமா

டெல்லியைப் போல வருமா

கடந்த முறை டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பதக்கங்களை இந்தியர்கள் வென்றனர். அதேபோல கிளாஸ்கோ போட்டியிலும் பதக்கங்களை அள்ளுமா இந்தயா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

கிளாஸ்கோ கிளம்பிப் போன முதல் பிரிவு

கிளாஸ்கோ கிளம்பிப் போன முதல் பிரிவு

இந்திய தடகள அணியின் 26 பேர் கொண்ட முதல் குழு ஏற்கனவே கிளாஸ்கோ போய்ச் சேர்ந்து விட்டது.

ஆடவர் 4x400 மீ்ட்டர் தொடர் ஆட்டம்

ஆடவர் 4x400 மீ்ட்டர் தொடர் ஆட்டம்

இப்பிரிவில் ராஜீவ் ஆரோக்கியா, குனி முகம்மது, சச்சின் ராபி, லலித் மாத்தூர், ஜித்து பேபி, ஜிபின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

டிரிபிள் ஜம்ப்

டிரிபிள் ஜம்ப்

110 எம்எச் போட்டியில் திங்களய்யா சித்தாந்த் கலந்து கொள்கிறார். டிரிபிள் ஜம்ப் போட்டியில் அர்பிந்தர் சிங்கும், குண்டு எறிதலில் ஓம் பிரகாஷும், வட்டு எறிதலில் விகாஷ் கெளடாவும் பங்கேற்கிறார்கள். ஈட்டி எறிதலுக்கு ரவீந்தர் சிங்

கெய்ரா, தேவிந்தர் சிங், விபின் கசனா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

மகளிர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டம்

மகளிர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டம்

இப்பிரிவில் சாரதா நாராயண், ஜோதி, சர்பானி நந்தா, ஆஷா ராய், சாந்தினி வல்லிக்காடு, மெர்லின் ஜோசப் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

4x400 மீ்ட்டர் தொடர் ஓட்டம்

4x400 மீ்ட்டர் தொடர் ஓட்டம்

இப்பிரிவில் பூவம்மா, டின்டு லூக்கா, தேபஸ்ரீ மஜூம்தார், ரத்தந்தீப் கெளர், அனில்டா தாமஸ், அஸ்வினி அக்குன்ஜி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

உயரம் தாண்டுதல்

உயரம் தாண்டுதல்

மகளிர் உயரம் தாண்டுதல் பிரிவில் சஹானா குமாரி, நீளம் தாண்டுதலில் மயூக்கா ஜானி பங்கேற்பார்கள். வட்டு எறிதலில் சீமா பூனியா, கிருஷ்ண பூனியா, ஜாவலின் துரோவில் அன்னு ராணி பங்கேற்பார்கள்.

பி.டி.உஷா

பி.டி.உஷா

முன்னாள் வீராங்கனை பி.டி.உஷா, தொடர் ஓட்டப் போட்டிகளுக்கான பயிற்சியாளராக செயல்படுவார்.

Story first published: Wednesday, July 16, 2014, 19:47 [IST]
Other articles published on Jul 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+