Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் 2026 இறுதி நாள்.. இந்திய வீரர்கள் ஆடும் போட்டி அட்டவணை.. பதக்க வாய்ப்பு உண்டா?

கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் (ஆகஸ்ட் 2) நிறைவடைகின்றன. கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டுத் தொடரின் இறுதி நாளான இன்று, இந்திய வீரர்கள் ஜூடோ, டிராக் சைக்கிளிங் மற்றும் பாரா டிராக் சைக்கிளிங் ஆகிய போட்டிகளில் களமிறங்குகிறார்கள்.

போட்டியின் இறுதி நாளான இன்று ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இந்தியாவின் நட்சத்திர சைக்கிளிங் வீரரான ரொனால்டோ சிங் லைடோன்ஜாம் மீது உள்ளது. இவர் ஆண்களுக்கான 1000 மீட்டர் டைம் ட்ரையல் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

CWG 2026 Final Day August 2 India Schedule Last medal rush begins with Judo and Cycling

இதேபோல் ஜூடோ பிரிவிலும் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. ஜூடோவில் பெண்களுக்கான 78 கிலோ எடைப் பிரிவில் இஷ்ரூப் நரங், ஸ்காட்லாந்தின் நிகோல் வுட்டை எதிர்கொள்கிறார். ஆண்களுக்கான 100 கிலோ எடைப்பிரிவில் அவ்தார் சிங்கும், 100 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் யாஷ் கங்காஸும் களமிறங்குகின்றனர். இவர்கள் நாக்-அவுட் சுற்றுகளைக் கடந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால் இன்று இரவே பதக்கச் சுற்றுகளில் விளையாடுவார்கள்.

பாரா டிராக் சைக்கிளிங் பிரிவில் பெண்களுக்கான C4-C5 1000 மீட்டர் டைம் ட்ரையல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லிஷா தாஸ் பங்கேற்கிறார். மேலும், ஆண்களுக்கான 40 கிலோமீட்டர் பாயிண்ட்ஸ் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் ஹர்ஷ்வீர் சிங் செகோன் மற்றும் தினேஷ் குமார் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

நேற்று வரை 39 பதக்கங்களுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள நிலையில், இறுதி நாளில் இந்திய வீரர்கள் கூடுதல் பதக்கங்களை வென்று தங்களது காமன்வெல்த் பயணத்தை மிகச் சிறப்பாக நிறைவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் 2026.. ஒரே நாளில் 16 பதக்கங்களை வாரிக்குவித்த இந்தியா.. குத்துச்சண்டையில் தங்க மழை

காமன்வெல்த் 2026.. ஒரே நாளில் 16 பதக்கங்களை வாரிக்குவித்த இந்தியா.. குத்துச்சண்டையில் தங்க மழை

இந்திய வீரர்களின் ஆகஸ்ட் 2 காமன்வெல்த் போட்டி அட்டவணை (இந்திய நேரப்படி):

ஜூடோ

  • மதியம் 2:30 மணி முதல் - மகளிர் 78 கிலோ எடைப்பிரிவு, 16-வது சுற்று - இஷ்ரூப் நரங் எதிர் நிகோல் வுட் (ஸ்காட்லாந்து)
  • மதியம் 2:30 மணி முதல் - ஆண்கள் 100 கிலோ எடைப்பிரிவு, 16-வது சுற்று - அவ்தார் சிங் எதிர் அரிஸ்டோஸ் மைக்கேல் (சைப்ரஸ்)
  • மதியம் 2:30 மணி முதல் - ஆண்கள் 100 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு, 16-வது சுற்று - யாஷ் கங்காஸ் எதிர் ஜோசுவா ஒயிட்ஹவுஸ் (வேல்ஸ்)
  • இரவு 7:30 மணி முதல் - மகளிர் 78 கிலோ எடைப்பிரிவு, பதக்கச் சுற்றுகள் - இஷ்ரூப் நரங் (தகுதி பெறுவதைப் பொறுத்து)
  • இரவு 7:30 மணி முதல் - ஆண்கள் 100 கிலோ எடைப்பிரிவு, பதக்கச் சுற்றுகள் - அவ்தார் சிங் (தகுதி பெறுவதைப் பொறுத்து)
  • இரவு 7:30 மணி முதல் - ஆண்கள் 100 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு, பதக்கச் சுற்றுகள் - யாஷ் கங்காஸ் (தகுதி பெறுவதைப் பொறுத்து)

டிராக் சைக்கிளிங் மற்றும் பாரா டிராக் சைக்கிளிங்

  • மதியம் 2:09 மணி - ஆண்கள் 40 கிலோமீட்டர் பாயிண்ட்ஸ் பந்தயம், தகுதிச் சுற்று - ஹர்ஷ்வீர் சிங் செகோன் (ஹீட் 1), தினேஷ் குமார் (ஹீட் 2)
  • பிற்பகல் 3:51 மணி - ஆண்கள் 1000 மீட்டர் டைம் ட்ரையல் இறுதிப் போட்டி - ரொனால்டோ சிங் லைடோன்ஜாம்
  • இரவு 8:40 மணி - மகளிர் C4-C5 1000 மீட்டர் டைம் ட்ரையல் இறுதிப் போட்டி - லிஷா தாஸ்
  • இரவு 9:09 மணி - ஆண்கள் 40 கிலோமீட்டர் பாயிண்ட்ஸ் பந்தயம், இறுதிப் போட்டி - ஹர்ஷ்வீர் சிங் செகோன், தினேஷ் குமார் (தகுதி பெறுவதைப் பொறுத்து)
Story first published: Sunday, August 2, 2026, 7:58 [IST]
Other articles published on Aug 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+