Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CWG 2026: யார் இந்த யாஷ் வீர் சிங்? நீரஜ் சோப்ரா உடன் பதக்கம் வென்ற இளம் இந்திய சிங்கம்

கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் போட்டிகளில், ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று யாஷ் வீர் சிங் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய தடகள வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய மற்றொரு நட்சத்திரமாக அவர் உருவெடுத்துள்ளார். இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், இறுதிப் போட்டியில் அவர் அபாரமாக செயல்பட்டு பதக்கப் பட்டியலுக்குள் சென்றார்.

அக்டோபர் 22, 2001 அன்று பிறந்த யாஷ் வீர் சிங், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜூனியர் அளவிலான போட்டிகளில் இந்தியாவின் மிகச்சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக அவர் உருவெடுத்தார். இந்திய U-20 பெடரேஷன் கோப்பை தொடரில் நீரஜ் சோப்ராவின் சாதனையை முறியடித்ததன் மூலம் தடகள உலகின் கவனத்தை யாஷ் வீர் முதன்முதலில் ஈர்த்தார். பின்னர், தனது இளம் வயதிலேயே 80 மீட்டர் தூரத்தைக் கடந்து அசத்தினார்.

Yashvir

கடந்த சில சீசன்களாக இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக யாஷ் தொடர்ந்து திகழ்ந்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற 2025 இந்திய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது இவரது முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். மேலும், 2025 இல் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஜி. அர்சுமனோவ் நினைவுப் போட்டியில் முதலிடம் பிடித்ததுடன், டோக்கியோவில் நடந்த 2025 உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஜோலித்தார்.

காமன்வெல்த் 2026: தேஜாஸ்வின் சங்கர் வரலாற்ற சாதனை.. டெக்கத்லான் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

காமன்வெல்த் 2026: தேஜாஸ்வின் சங்கர் வரலாற்ற சாதனை.. டெக்கத்லான் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

2026 காமன்வெல்த் போட்டிகளில், சக இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் ஆகியோருடன் இணைந்து யாஷ் வீர் சிங் தகுதிச் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் மூன்று இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தினர். கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட யாஷ்வீர் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்று தனது தடகள வாழ்க்கையின் ஆகச்சிறந்த மைல்கல்லை எட்டினார்.

இறுதிப் போட்டியின் கடைசி சுற்று வரை யாஷ் வீர் சிங் ஐந்தாவது இடத்திலேயே நீடித்தார். ஆனால், தனது கடைசி முயற்சியில் எல்லாவற்றையும் மாற்றி அமைத்து, 85.41 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தனது புதிய தனிநபர் சாதனையைப் பதிவு செய்தார். தற்போது 24 வயதே ஆகும் யாஷ் வீர் சிங், சர்வதேச அனுபவங்கள் மற்றும் தற்போது வென்றுள்ள காமன்வெல்த் வெண்கலப் பதக்கத்துடன், வரும் ஆண்டுகளில் முன்னணி உலகத் தடகளப் போட்டிகளில் மேலும் பல பதக்கங்களை வெல்லும் திறமையுடன் விளங்குகிறார்.

நீரஜ் சோப்ரா அபாரம்.. ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்று இந்தியா சாதனை.. காமன்வெல்த்தில் கலக்கல்

Also Read

நீரஜ் சோப்ரா அபாரம்.. ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்று இந்தியா சாதனை.. காமன்வெல்த்தில் கலக்கல்

இப்போட்டியின் பதக்க மேடை முழுமையாக தெற்காசிய வீரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த ருமேஷ் தரங்க பத்திரகே 89.75 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையை நிகழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்தியாவின் ஒலிம்பிக் நாயகனான நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரம் எறிந்து தனது சீசனின் சிறந்த செயல்பாட்டுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து யாஷ் வீர் சிங் 85.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார்.

Story first published: Saturday, August 1, 2026, 6:10 [IST]
Other articles published on Aug 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+