Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் போட்டி: துப்பாக்கி சுடுதலில் நஞ்சப்பா வெள்ளி வென்றார்! பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நஞ்சப்பா இன்று வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் நாளான நேற்று, ஆண்கள் பிரிவில் அபிநவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார்.

மகளிர் பிரிவில் மலைக்கா வெள்ளிப்பதக்கம் வென்றார். பளு தூக்கும் போட்டியில் சந்தோஷி மட்சா வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெள்ளி வென்ற மலைக்கா

வெள்ளி வென்ற மலைக்கா

பெண்கள் 10 மீட்டர் துப்பாக்கிசுடும் போட்டியில், இந்தியாவின் மலைக்கா கோயல், வெள்ளிப்பதக்கம் வென்று, இரண்டாம் நாளில் இந்தியாவின் பதக்கப்பட்டியலை உயர்த்தினார்.

அபிநவ் பிந்த்ராவுக்கு தங்கம்

அபிநவ் பிந்த்ராவுக்கு தங்கம்

இதன் பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா, 10 மீட்டர் ரைபிள் பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் 205.3 புள்ளிகள் பெற்று, காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனை படைத்தார்.

மூன்று தங்கப்பதக்கம்

மூன்று தங்கப்பதக்கம்

இது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் 3வது தங்கப்பதக்கம் ஆகும். காமன்வெல்த் போட்டியில், அபிநவ் பிந்தரா தனிப்பட்ட முறையில் பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷி மட்சா

சந்தோஷி மட்சா

53 கிலோ பிரிவினருக்கான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்ற நைஜீரியாவை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி சிக்கா அமலஹா 196 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தையும், பப்புவா மற்றும் நியூ குனியா நாட்டை சேர்ந்த 2 குழந்தைக்கு தாயான டிக்கா டுவா 193 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தோஷி மட்சா(20) 188 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

11 பதக்கங்கள்

11 பதக்கங்கள்

முதல் நாளில் இந்தியா 2 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்களை பெற்றிருந்தது. இரண்டாம் நாளான நேற்று மேலும் மூன்று பதக்கங்கள் கிடைத்தது.

இன்று மீண்டும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை இந்தியா மொத்தம் 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது.

வெள்ளி வென்ற நஞ்சப்பா

வெள்ளி வென்ற நஞ்சப்பா

இன்று ( சனிக்கிழமை) நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிற்கான போட்டியில் பிரகாஷ் நஞ்சப்பா 198.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீரரான ரெபாசோலியிடம் நூலிழையில் தங்கத்தை பறிகொடுத்தார் நஞ்சப்பா.

Story first published: Saturday, July 26, 2014, 18:23 [IST]
Other articles published on Jul 26, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+