Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பக்கவாதம் தாக்கி மீண்டு காமன்வெல்த்தில் பதக்கம் வென்று சாதனை படைத்த நஞ்சப்பா

கிளாஸ்கோ: பக்கவாதம் தாக்கி அதிலிருந்து மீண்டு, தொடர் பயிற்சியின் விளைவாக இன்று காமன்வெல்த் போட்டியில், பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் பிரகாஷ் நஞ்சப்பா.

ஆடவர் 10 மீ்ட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நஞ்சப்பா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

கிளாஸ்கோவில் உள்ள பேரி பட்டன் ஷூட்டிங் மையத்தில் நேற்று நடந்த போட்டியில் பிரகாஷ் நஞ்சப்பா 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

பெங்களூர் வீரர்

பெங்களூர் வீரர்

38 வயதான நஞ்சப்பா பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 198.2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதலிடத்தை ஆஸ்திரேலியா வீரர் டேணியல் ரிபசோலி பெற்றார். அவர் புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்து தங்கம் வென்றார்.

கடந்த ஆண்டு பக்கவாதம்

கடந்த ஆண்டு பக்கவாதம்

நஞ்சப்பாவின் கதை ஆச்சரியமானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஸ்பெயினில் நடந்த போட்டியின்போது இந்த விபரீதம் நேர்ந்தது. அவருக்கு பெல்ஸ் பால்ஸி (Bell's palsy) என்ற முகவாதம் தாக்கியது.

மீண்டு வந்து சாதனை

மீண்டு வந்து சாதனை

அதன் பின்னர் அதிலிருந்து மீண்டார் நஞ்சப்பா. தொடர் பயிற்சிகளின் விளைவாக இன்று பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

தென் கொரியாவில் வெண்கலம்

தென் கொரியாவில் வெண்கலம்

கடந்த ஆண்டு தென் கொரியாவில் நடந்த ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது ஒரு படி முன்னேறி வெள்ளியை வென்றுள்ளார்.

சின்னத் தவறில் கைதவறிய தங்கம்

சின்னத் தவறில் கைதவறிய தங்கம்

உண்மையில் காமன்வெல்த் போட்டியில் பிரகாஷ் தங்கம் வென்றிருக்க முடியும். ஆனால் அவர் செய்த ஒரு தவறால் ஆஸ்திரேலியாவுக்கு தங்கம் போய் விட்டது. இத்தனைக்கும் தகுதிச் சுற்றுப் போட்டியில் நஞ்சப்பாதான் முதலிடத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 27, 2014, 11:21 [IST]
Other articles published on Jul 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+