Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குகேஷ் வரலாற்று வெற்றி.. மேஜையை அடித்து கோபத்தை காட்டிய கார்ல்சன்.. நார்வே செஸ்-இல் என்ன நடந்தது?

நார்வே: உலக செஸ் அரங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் உலக செஸ் சாம்பியன் குகேஷ், உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களில் ஒருவரும், தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இதுவே மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக குகேஷின் முதல் வெற்றி ஆகும்.

இந்த வெற்றிக்கு பிறகு கார்ல்சன் மேஜையை அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய நிலையில் குகேஷ் வெற்றிக்கு பிறகு மரியாதையுடன் நடந்து, வெற்றிபெறும் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். மே 1, ஞாயிற்றுக்கிழமை அன்று நார்வே செஸ் தொடரில் கார்ல்சனின் சொந்த மண்ணிலேயே அவரை வீழ்த்தி குகேஷ் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த வெற்றி, அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது.

D Gukesh s Historic Win Over Magnus Carlsen A Victory With Grace

இந்த எதிர்பாராத வெற்றி குறித்து குகேஷ் அடக்கமாகவே குறிப்பிட்டார். . "100 முறை விளையாடினால் 99 முறை நான் தோற்றிருப்பேன். இது எனக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள்," என்று அவர் கூறினார். குகேஷின் அமைதியான மற்றும் நிதானமான அணுகுமுறை, கார்ல்சனின் எதிர்வினைக்கு நேர்மாறாக இருந்தது. உலக சாம்பியனான குகேஷிடம் தோற்ற பிறகு, கார்ல்சன் ஆடுகளத்தை மேஜையில் அடித்துவிட்டு ஆத்திரத்துடன் வெளியேறினார்.

"நான் அவருக்கு எதிராக தந்திரமான நகர்வுகளை விளையாட முயற்சித்தேன், அதிர்ஷ்டவசமாக கார்ல்சன் நேரம் இல்லாத நெருக்கடிக்குள் சிக்கினார். இந்தத் தொடரில் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நேரம் இல்லாத நெருக்கடிகள் மிகவும் கட்டுக்கடாமல் போகலாம் என்பதுதான்" என்று கார்ல்சனை வீழ்த்திய பிறகு குகேஷ் கூறினார்.

புகழ்பெற்ற செஸ் வீராங்கனை சூசன் போல்கர், குகேஷின் பேட்டிக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிலளித்து, இந்திய வீரரை ஒரு போர்வீரனின் இதயத்தைக் கொண்டவர் என்று பாராட்டினார் - "அவர் வெற்றியை வார்த்தைகளிலோ அல்லது உணர்ச்சிகளிலோ காட்டவில்லை என்றாலும். "உலக சாம்பியன் 'மரியாதையுடன் வெற்றி பெறுவது' என்பதன் உண்மையான அர்த்தத்தைக் வெளிப்படுத்தினார்! அவருக்கு ஒரு போர்வீரனின் இதயம் இருக்கிறது! பலமுறை அவர் சிக்கலில் இருந்தும், நேர நெருக்கடியிலும் கூட, முடிந்தவரை கடுமையாகப் போராடி, ஒரு பெரிய வெற்றியுடன் வெகுமதி பெற்றார்!" என்று போல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

நார்வே செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் கார்ல்சனின் சொந்த மண்ணில், குகேஷ் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். கிளாசிக்கல் தொடரில் கார்ல்சனை குகேஷ் முதல் முறையாக வீழ்த்தி இருக்கிறார். இது குகேஷுக்கு ஒரு திருப்புமுனை வெற்றியாக அமைந்தது. ஏனெனில், நார்வே செஸ் தொடரின் முதல் சுற்றில் கார்ல்சனிடம் கருப்புக் காய்களுடன் விளையாடி குகேஷ் தோல்வியடைந்திருந்தார்.

கார்ல்சன் இந்த போட்டியின் பெரும்பாலான நேரம் கையை மேலோங்க வைத்திருந்தார், ஆனால் குகேஷ் ஒழுக்கத்துடனும் நிதானத்துடனும் தற்காத்துப் போராடினார். கார்ல்சன் நேரம் இல்லாத நெருக்கடியில் தடுமாறியபோது, ​​குகேஷ் துல்லியமான எதிர் தாக்குதலுடன் ஆட்டத்தை மாற்றினார்.

கார்ல்சனின் தோல்விக்கு அவர் காட்டிய எதிர்வினை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது - அவர் மேஜையை மிகவும் பலமாக அடித்ததால், குகேஷ் உட்பட அறையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்டாலும், பின்னர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

Story first published: Monday, June 2, 2025, 13:30 [IST]
Other articles published on Jun 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+