
வீடுகளில் முடக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும் முடங்கியுள்ள நிலையில், வீரர்களும் தங்களது வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். பரபரப்பாக பல நாடுகளுக்கும் சென்று கிரிக்கெட் போட்டிகளை விளையாடிவந்த வீரர்கள், தற்போது பயிற்சி ஆட்டங்களை கூட விளையாட முடியாத அளவில் தனித்து விடப்பட்டுள்ளனர்.

டேவிட் வார்னர் டிக்டாக்
இதனிடையே கொரோனாவால் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவருடைய அலப்பறைகள் எல்லை மீறி தான் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து டிக்டாக் வீடியோக்களை அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்திய பாடல்களுக்கு நடனம்
டிக்டாக் வீடியோக்களில் திரைப்பட பாடல்களுக்கு, குறிப்பாக இந்திய திரைப்பட பாடல்களுக்கு அவர் தனியாகவும் குடும்பத்தினருடன் சேர்ந்தும் ஆடி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இத்தகைய வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் அவரது ரசிகர்கள் வட்டம் 4.3 மில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் நடனம் சரியாக வரவில்லை என்று கலாய்த்தவர்கள்கூட தற்போது அவரது ரசிகர்களாகிவிட்டனர்.

வார்னரின் சவால்
இந்நிலையில் தற்போது அவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் வொர்க்அவுட் செய்யும் அவர், கைகளையும், கால்களையும் அந்தரத்தில் விட்டு மேஜிக் செய்துள்ளார். மேலும் இதுபோல செய்ய முடியுமா என்று சவாலும் விட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பின்னணியில் பிரபல பாடகர் ஹனி சிங்கின் பாடல் ஒலிக்கிறது. பார்க்கவும் அழகாக இருக்கிறது அந்த வீடியோ. வார்னரின் சிரிப்பு ஒன்று போதுமே.


Click it and Unblock the Notifications











