Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடா... பங்கஜ் சிங்குக்கு வந்த சோதனையைப் பாருங்க!

செளதாம்ப்டன்: செளதாம்ப்டனில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் பங்கஜ் சிங்குக்கு தேவையில்லாத ஒரு அவப் பெயர் கிடைத்து விட்டது. ஒரு பந்து வீச்சாளருக்குக் கிடைக்கக் கூடாத பெயரைச் சம்பாதித்து விட்டார் பங்கஜ் சிங்.

3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின்போதுதான் இந்த சோதனையைச் சந்தித்தார் சிங். அது சாதனையாகவும் மாறி அவரை நெளிய வைத்து விட்டது.

இரு இன்னிங்ஸ் பந்து வீசிய பங்கஜ் சிங் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பதுதான் அந்த சாதனை.

இதுதான் அறிமுகம்

இதுதான் அறிமுகம்

பங்கஜுக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டியாகும். 29 வயதான சிங் மீது பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அவர் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.

ஆனா ரன் நிறைய பாஸ்...

ஆனா ரன் நிறைய பாஸ்...

ஆனால் ரன்களை மட்டும் வாரி வாரிக் கொடுத்துள்ளார் பங்கஜ் சிங். இரு இன்னிங்ஸிலும் அவர் மொத்தமாக 179 ரன்களை வாரி வழங்கி விட்டார்.

சொஹைல் கான் பரவாயில்லை

சொஹைல் கான் பரவாயில்லை

இதற்கு முன்பு பாகிஸ்தானின் சொஹைல்கான் தனது முதல் டெஸ்ட் போட்டியின்போது விக்கெட் எடுக்காமல் 164 ரன்களைக் கொடுத்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது பங்கஜ் சிங் முறியடித்துள்ளார்.

தொப்பிக் கொடுத்த கங்குலி

தொப்பிக் கொடுத்த கங்குலி

ராஜஸ்தானைச் சேர்ந்தவரான பங்கஜ் சிங் இஷாந்த் சர்மாவுக்குப் பதில் அணியில் சேர்க்கப்பட்டார். இவர் களத்தில் இறங்குவதற்கு முன்பாக இவருக்கு முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்த்து தெரிவித்து தொப்பியைக் கொடுத்து அனுப்பி வைத்தார். ஆனால் தொப்பியை வைத்து முகத்தை மறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது சிங்குக்கு.

லோக்கலில் சூப்பர்

லோக்கலில் சூப்பர்

ஆனால் உள்ளூரில் நல்ல பவுலர்தான் பங்கஜ். 77 முதல் தர போட்டிகளில் ஆடி 300 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். இந்தியாவுக்கா ஒரு ஒரு நாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.

தப்பு ஜடேஜா மீதுதான்

தப்பு ஜடேஜா மீதுதான்

ஆனால் முதல் நாளிலேயே பங்கஜ் சிங்குக்கு ஒரு விக்கெட் கிடைத்திருக்க வேண்டியது. அதாவது இவர் வீசிய பந்தை அலிஸ்டர் குக் அடித்தபோது அது நேராக ரவீந்திர ஜடேஜாவை நோக்கிப் போனது. ஆனால் ஜடேஜாதான் அதைப் பிடிக்காமல் மிஸ் செய்து விட்டார்.

ஆனால் நல்ல பவுலிங்

ஆனால் நல்ல பவுலிங்

ஆனால் பங்கஜ் சிங்கின் பந்து வீச்சை பல முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டியுள்ளனர். நல்ல பவுலிங்தான், ஆனால் விக்கெட் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Thursday, July 31, 2014, 12:21 [IST]
Other articles published on Jul 31, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+