Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"விட்றாதீங்க".. கணவனுக்கு விடாமல் "கீ" கொடுத்து.. சூப்பர் வெற்றியைப் பெற வைத்த தீபிகா குமாரி

டோக்கியோ: கணவரை என்கரேஜ் செய்தே அடுத்தடுத்து வெற்றியை குவிக்க வைத்துவிட்டார் தீபிகா குமாரி.

ஒலிம்பிக் போட்டிகள் படு சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றன. ஜப்பான், அமெரிக்கா, சீனா இடையே, யார் அதிகம் கோல்டு வெல்கிறார்கள் என்ற போட்டி நிலவினாலும், மற்ற நாடுகளும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை இன்னமும் மீராபாய் சானு வென்ற வெள்ளிப்பதக்கம் மட்டுமே கையில் உள்ளது. எனினும், அடுத்தடுத்து நாட்களில் இந்தியா வசம் பதக்கங்கள் அணிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.

 அட்டானு தாஸ்

அட்டானு தாஸ்

இந்த நிலையில், இன்று நடந்த ஹாக்கி, பேட்மிண்டன், வில்வித்தை என்று பல போட்டிகளில் இந்தியா வெற்றிவாகை சூடியுள்ளது. குறிப்பாக வில்வித்தை பி பிரிவில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. இன்று நடந்த போட்டியில் ஆண்கள் வில்வித்தை அணியில் இந்தியாவின் அட்டானு தாஸ், 1/32 வெளியேற்றுதல் பிரிவில் சீன தைபே வீரரை 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

சவால்

சவால்

பிறகு, கொரிய வீரர் ஜின்-ஹய்க் என்பவரை 1/16 வெளியேற்றுதல் சுற்றில் அட்டானு தாஸ் சந்தித்தார். இதில் முதல் செட்டில் 25-26 என்ற கணக்கில் அட்டானு இழந்தார். பிறகு இரண்டாவது செட் 27 - 27 என்று டிராவானது. இதனால், 1-3 என்று கொரிய வீரர் முன்னிலை வகித்தார். இதையடுத்து நடந்த மூன்றாவது செட்டும் 27 - 27 என்று டிராவானது. இதனால், 2- 4 என்று மீண்டும் கொரிய வீரர் முன்னிலை பெற்றார்.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

பிறகு நான்காவது செட்டை அட்டானு தாஸ் கைப்பற்ற 4-4 என்று ஆட்டம் சூடுபிடித்தது. இதில், கணவர் அட்டானு தாஸ் சிறப்பாக செயல்பட மிக முக்கிய காரணமாக இருந்தவர், மனைவியும் வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி தான். ஒவ்வொரு முறை தனது கணவர் சறுக்கும் போதும், புள்ளிகளை குவிக்கும் போதும் என இரண்டு தருணங்களிலும் பக்கபலமாக இருந்து கணவரை என்கரேஜ் செய்து கொண்டே இருந்தார்.

 மெடலுக்கு வாய்ப்பு

மெடலுக்கு வாய்ப்பு

இறுதியில், சிறப்பாக செயல்பட்ட அட்டானு தாஸ், இப்போட்டியில் வென்று pre-quarters ஆட்டத்துக்கு முன்னேறினார். முன்னதாக நேற்று நடந்த ஆட்டத்தில், தீபிகா குமாரி அட்டகாசமாக செயல்பட்டு, அடுத்தடுத்து சுற்றுகளுக்கு தகுதிப் பெற்றிருக்கும் நிலையில், தற்போது கணவரையும் காலிறுதிக்கு முந்தைய போட்டிக்கு கூட்டிச் சென்றுவிட்டார். தம்பதிகள் இருவரும் மெடல் அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Story first published: Thursday, July 29, 2021, 18:55 [IST]
Other articles published on Jul 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+