For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் வில்வித்தை.. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் தீபிகா குமாரி தகுதி

By Karthikeyan

ரியோ டி ஜெனிரோ: வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏழாவதி நாளான இன்று வில்வித்தை தனிநபர் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள இந்தியாவின் தீபிகா குமாரி ரவுண்ட்-64 சுற்றில் ஜார்ஜியாவின் எசபாவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் 6-4 (27-26, 29-29, 30-27, 29-27, 29-29) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட்-32 சுற்றுக்கு முன்னேறினார்.

Deepika Kumari advances into pre-quarters of women's individual archery

ரவுண்ட்-32 சுற்றில் தீபிகா, இத்தாலியின் சர்டோரியை எதிர்கொண்டார். இதில் 6-2 (24-27, 29-26, 28-26, 28-27) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இச்சுற்றில் தீபிகா, சீன தைபே வீராங்கனை டன் யா-டிங்கை எதிர்கொள்கிறார். இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ள மற்றொரு இந்திய வீராங்கனை பொம்பைலா தேவி மெக்சிகோ வீராங்கனையை இன்று சந்திக்கிறார். இந்த போட்டி மாலை 6.06 மணிக்கு நடைபெறுகிறது.

Story first published: Thursday, August 11, 2016, 9:55 [IST]
Other articles published on Aug 11, 2016
English summary
India's top athlete and one of the best hopes for Olympic medal, archer Deepika Kumari, advanced into pre-quarterfinal stage of the women's individual archery competition of the ongoing Rio Olympics here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X