'ஃபவுல்': காமன்வெல்த் தடகள வீராங்கனையின் தங்கப் பதக்கம் பறிப்பு

போட்டியின் தொடக்கத்தில் கிளம்பும்போது அவர் ஃபவுல் செய்ததாக இங்கிலாந்து எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வீடியோ பதிவைப் பார்த்த அதிகாரிகள் அது உண்மை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து தங்கப் பதக்கத்தை பறித்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்தப் போட்டியில் 11.28 விநாடிகளில் போட்டி தூரத்தைக் கடந்து முதலில் வந்தார் பியர்சன்.
போட்டியின் தொடக்கத்தின் போது முதலில் ஃபவுல் செய்தவர் இங்கிலாந்து வீராங்கனை லாரா டர்னர்தான். துப்பாக்கி வெடிப்பதற்கு முன்பே அவர் காலை கோட்டைத் தாண்டி வைத்து விட்டதால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. அதேசமயம், பியர்சனும் கூட ஃபவுல் செய்திருந்தார். ஆனால் அதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. இருவரும் போட்டியில் பங்கேற்று ஓடினர்.
இதில் லாரா கடைசி இடத்தைப் பிடித்தார், பியர்சன் முதலிடத்தைப் பிடித்தார்.
போட்டி முடிந்ததும் பியர்சனும் ஃபவுல் செய்திருப்பதாக இங்கிலாந்து அணி முறையிட்டது. இதையடுத்து ஆய்வு செய்ததில் உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து பியர்சனுக்கு வழங்கப்பட்ட பதக்கம் பறிக்கப்பட்டது.
அதையடுத்து 2வது இடத்தைப் பிடித்த நைஜீரியாவின் ஓசயாமி ஒலுடமோலா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
3வது இடத்தைப் பிடித்திருந்த செயின்ட் வின்சன்ட் அன்ட் கிரனடியன்ஸ் நாட்டின் நதாஷா மேயர்ஸ் 2வது இடத்தைப் பிடித்தவராகவும், இங்கிலாந்தின் காத்தரின் என்டகோட் 3வது இடத்தைப் பிடித்தவராகவும் அறிவிக்கப்பட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications