காமன்வெல்த் போட்டிக்கு இன்னும் 100 நாள்- இதுவரை சமையல் காண்டிராக்ட் விடப்படவில்லை!

போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி ஆறு நிறுவனங்களுக்கு காண்டிராக்டை கொடுக்கலாம் என பரிந்துரைத்து ஒரு மாதமாகி விட்ட நிலையில், இன்னும் காண்டிராக்ட் ஒப்பந்தம் கொடுக்கப்படாமல் உள்ளதாம்.
சம்பந்தப்பட்ட காண்டிராக்ட் நிறுவனங்களுக்கு இதுவரை காண்டிராக்ட் ஒப்பந்தம் தரப்படவில்லை என்று ஒருங்கிணைப்புக் கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது.
டெலவரே நார்த், பி.கே.எல், தாஜ் சாட்ஸ் ஆகியவை உள்ளிட்ட அந்த ஆறு நிறுவனங்களும் ஒப்பந்த அனுமதிக் கடிதத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளன.
அனுமதி கிடைத்தவுடன் சமையலறைகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளைத் தொடங்க குறைந்தது 120 நாட்களாவது தேவைப்படும் என ஆறு நிறுவனங்களும் கூறியுள்ளன. ஆனால் போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே இருப்பதால் சாப்பாடு விஷயத்தில் பெரும் குழப்பம் ஏற்படப் போவது உறுதி என நம்பப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications