காமன்வெல்த் போட்டியில் 31வது தங்கப் பதக்கம் வென்றது இந்தியா

மான்செஸ்டர் காமன்வெல்த் போட்டியில் 30 தங்கம் வென்றதே இந்தியா இதுவரை காமன்வெல்த் போட்டி வரலாற்றில் பெற்ற ஒரே சாதனை அளவாக இருந்தது. இன்று அதை முறியடித்தது இந்தியா. இன்று 31வது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தனர் இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளான ஹீனா சிந்து மற்றும் அனுராஜ் சிங் ஜோடி.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜோடிப் பிரிவில் ஹீனா, அனுராஜ் ஜோடி தங்கப் பதக்கத்தை வென்று இந்த சாதனையை நிகழ்த்தியது.
இந்தியா தற்போது 31 தங்கம், 25 வெள்ளி, 28 வெண்கலம் என 84 பதக்கங்களுடன் தொடர்ந்து 2வது இடத்தில் பீடு நடை போட்டு வருகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications