காமன்வெல்த் போட்டி-ஒரே நாளில் 4 பதக்கங்களைப் பெற்றது இந்தியா
டெல்லி: காமன்வெல்த் போட்டியின் தொடக்க நாளான நேற்று ஒரே நாளில் நான்கு பதக்கங்களை வென்றது இந்தியா.
இதில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள். மற்ற இரண்டும் வெண்கலப் பதக்கங்கள் ஆகும். தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நேற்று இந்தியா மயிரிழையில் நழுவ விட்டது.
பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை சோனியா சானு வெள்ளியும், சந்தியா தேவி வெண்கலமும் பெற்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் ஆடவருக்கான 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்தன. சுகேன் தே வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் சீனிவாச ராவ் வெண்கலப் பதக்கம் பெற்றார். இப்பிரிவில் மலேசிய வீரர் இப்ராகிம் அமிரூல் ஹமிஸான் தங்கம் வென்றார்.
நேற்று இந்தியாவுக்குக் கிடைத்த நான்கு பதக்கங்களும் பளுதூக்குதல் மூ்லம் வந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications