Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியின் "சென்னையின் எப்.சி" கால்பந்து அணிக்கு பிராண்ட் அம்பாசடர் ஆனார் தனுஷ்

சென்னை: இந்தியன் சாக்கர் லீக்கில் ஒரு புதிய கவர்ச்சி சேர்ந்துள்ளது. அவர்தான் தனுஷ். இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணி, நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோரை உரிமையாளர்களாகக் கொண்ட சென்னையின் எப்.சி. கால்பந்து அணிக்கு பிராண்ட் அம்பாசடராக நடிகர் தனுஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் லீக் பாணியில் இப்போது ஏகப்பட்ட லீக் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. கால்பந்து லீக் போட்டி, பேட்மிண்டன் லீக் போட்டி, கபடி லீக் போட்டிகள் என கலக்கி வருகிறது இந்திய விளையாட்டு உலகம்.

இந்த வரிசையில் இந்தியன் சாக்கர் லீக் எனப்படும் கால்பந்து லீக் கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக மாறியுள்ளது. இந்த ஆண்டு போட்டித் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் குதித்துள்ளன.

தனுஷ்

தனுஷ்

நடிகர் தனுஷை, தங்களது அணியின் பிராண்ட் அம்பாசடராக சென்னையின் எப்.சி கால்பந்து அணி நியமித்துள்ளது. தமிழகத்தில் சென்னை அணிக்காக விளம்பரத் தூதராக தனுஷ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளுக்கு வருவார்

போட்டிகளுக்கு வருவார்

இதுகுறித்து சென்னையின் எப்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தனுஷ் கால்பந்து போட்டியையும், லீக்கையும் பிரமோட் செய்வார். தமிழகம் முழுவதும் இந்த விளையாட்டு மக்களிடையே சென்று சேர உழைப்பார். தீவிர கால்பந்து ரசிகரான தனுஷ், சென்னை போட்டிகளின்போது அணியின் சீருடை அணிந்து ஸ்டேடியத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஞ்சுருவோம்...

செஞ்சுருவோம்...

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், இந்தியக் கால்பந்துக்கு மறுமலர்ச்சியாக அமைந்துள்ளது ஐஎஸ்எல். தரமான கால்பந்துப் போட்டிகளை ரசிகர்களுக்கு அது வழங்கும். இந்தப் போட்டிக்காக காத்திருக்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.

தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்துவேன்

தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்துவேன்

ஒரு தீவிர கால்பந்து ரசிகனான எனக்கு இந்த பிராண்ட்அம்பாசடர் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது சந்தோஷம் தருகிறது. பெருமையாக உள்ளது. எனது மொழியில், எனது மாநிலத்தில் இந்தக் கால்பந்துப் போட்டியை பிரபலப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

அக்டோபர் 3 முதல்

அக்டோபர் 3 முதல்

இந்த ஆண்டுத் தொடரில், அக்டோபர் 3ம் தேதி முதல் போட்டி நடைபெறவுள்ளது. அப்போது நடப்புச் சாம்பியன் ஆட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், சென்னையின் எப்.சி அணியும் மோதவுள்ளன.

Story first published: Wednesday, September 30, 2015, 8:07 [IST]
Other articles published on Sep 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+