Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக்: இந்தியாவை சேர்ந்த 3 தடகள வீரர்கள் தகுதி - 36 ஆண்டுகளுக்குப் பின் சாதனை

டெல்லி: இந்திய தடகள வீரர்கள் ஜின்சன் ஜான்சன், தரம்பீர் சிங், ரெஞ்சித் மகேஸ்வரி ஆகிய மூவரும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரியானாவைச் சேர்ந்த 27 வயதான தரம்பீர் சிங், 20.45 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்ததோடு ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். மேலும் கோழிக்கோட்டைச் சேர்ந்த 25 வயதான ஜின்சன் ஜான்சன், 800 மீட்டர் ஓட்டபந்தயத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், தேசிய அளவிலான தடகளப் போட்டி நடந்து வருகிறது. இதில் மும்முறைத் தாண்டும் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 30 வயதான ரெஞ்சித், 17.30 மீட்டர் நீளத்தை 20.45 வினாடிகளில் தாண்டி, தேசிய சாதனை படைத்தார்.

ரெஞ்சித் மகேஸ்வரி

ரெஞ்சித் மகேஸ்வரி

ரெஞ்சித் மகேஸ்வரி மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே ரெஞ்சித், காமன்வெல்த் போட்டியில் வெண்கலமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும் வென்றுள்ளார்.

தரம்பீர் சிங்

தரம்பீர் சிங்

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், ஹரியானாவைச் சேர்ந்த 27 வயதான தரம்பீர் சிங், 20.45 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார். ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற வேண்டுமென்றால், 200 மீட்டர் ஓட்டத்தை 20.50 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும். கடந்த 36 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கப் போகும் இந்திய வீரர் என்ற பெருமையை தரம்பீர் சிங் பெற்றார்.

சுப்ரமணியம் பெருமாள்

சுப்ரமணியம் பெருமாள்

இதற்கு முன் மாஸ்கோ ஒலிம்பிக்கில், சுப்ரமணியம் பெருமாள் என்பவர் 200 மீட்டர் ஓட்டத்திற்கு தகுதிப் பெற்றிருந்தார். ஆனால் அவர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார்.

ஜின்சன் ஜான்சன்

ஜின்சன் ஜான்சன்

அதேபோல் கேரளத்தை சேர்ந்த மற்றொரு தடகள வீரர் ஜின்சன் ஜான்சன், ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கப் போகிறார்.

டூட்டி சந்த்

டூட்டி சந்த்

ஆண்களுக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக கூறி, தடைக்கு உள்ளான இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த், ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கத் தகுதிப் பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற்றுள்ள 99வது இந்தியர் டூட்டி சந்த் ஆவார்.

இலக்கை கடந்து சாதனை

இலக்கை கடந்து சாதனை

கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்த கோஸ்நோவ் நினைவு தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில், இலக்கை 11.30 வினாடிகளில் கடந்ததையடுத்து, ஒலிம்பிக் போட்டிக்கு டூட்டி சந்த் முன்னேறியுள்ளார்.

36 ஆண்டுகளுக்குப் பின்

36 ஆண்டுகளுக்குப் பின்

கடந்த 1980 ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 100 மீட்டர் தூர ஓட்டப் போட்டியில் இந்தியா சார்பில் பி.டி. உஷா பங்கேற்றார். அவருக்குப் பின், அதாவது 36 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது டூட்டி சந்த் அப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Story first published: Tuesday, July 12, 2016, 15:14 [IST]
Other articles published on Jul 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+